பொன்மொழிகள்

வேலையின் களைப்பைவிட கவலையின் களைப்பு அதிகமாயிருக்கும்! - சீனா
பொன்மொழிகள்

* நூறு ஆசிரியர்களுக்கு ஒப்பானவர் பொறுப்பு மிக்க ஒரு தந்தை. 
- இங்கிலாந்து
* தன்னலத்தைத் துறந்தவர்களை எதிர்க்கும் சக்தி ஒன்றும் இல்லை. 
- ஜெர்மன்
* அன்பு நிறைந்த இடத்தில் குற்றங்கள் தென்படுவதில்லை 
- வேல்ஸ்
* பணம் இருந்தால் உனக்கு உன்னைத் தெரியாது.... பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 
- ஸ்பெயின்
* முதியோர் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஒளி மிக்க மணி இருக்கிறது! 
- சீனா
* அன்புடன் கூடிய இனிய சொற்கள் இரும்புக் கதவைக்கூடத் திறக்கும்! 
- வேல்ஸ்
* முட்டாள் வியாபாரம் செய்வதற்குள் சந்தை கலைந்துவிடும். 
- ஸ்பானிஷ்
* மரத்தின் மதிப்பு கனிகளில் தென்படுகிறது! 
- இலத்தீன்
* முயற்சி இல்லாமையால் வாய்ப்புகள் பறிபோகலாம்
- பல்கேரியா
* வேலையின் களைப்பைவிட கவலையின் களைப்பு அதிகமாயிருக்கும்! 
- சீனா
தொகுப்பு : அ.கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com