முத்துக் கதை! அனுபவம்!

பாலு என்ற குட்டிப் பையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு ஒரு நீண்ட கோலுடன் ஒரு முதியவர் வந்தார்.
முத்துக் கதை! அனுபவம்!

பாலு என்ற குட்டிப் பையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு ஒரு நீண்ட கோலுடன் ஒரு முதியவர் வந்தார். அவர் கடற்கரையில் இருந்த மணலில் தான் வைத்திருந்த கம்பால் ஒரு வட்டம் போட்டார்! அந்த வட்டம் பார்க்க அழகாக இருந்தது! அது ஏதோ ஒரு பெரிய காம்பஸ் கருவியால் நேர்த்தியாக வரையப்பட்டது போல் இருந்தது! குட்டிப் பையன் பாலுவுக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது!
 அவன் முதியவரிடம், ""தாத்தா!....எப்படி இவ்வளவு சரியா ஒரு வட்டத்தை வரைஞ்சீங்க!'' என்று வியப்போடு கேட்டான்.
 முதியவர் அவனிடம் தன் கையிலிருந்த கோலைக் கொடுத்து, ""முயற்சி செய்தால் நீ கூட இதுபோல் வட்டம் போட முடியும்!....'' என்றார்.
 பாலு கோலைவாங்கிக்கொண்டான். வட்டம் போட முயற்சி செய்தான்.... முடியவில்லை....திரும்பவும் முயன்றான்.....முடியவில்லை.... வட்டத்தைச் சரியாகப் போடவே வரவில்லை..... பாலு விடுவதாக இல்லை!.....முயன்றான்!....முயன்றான்... முயன்று கொண்டே இருந்தான்.
 பல நாட்கள் கடந்தன.....
 ஒரு நாள்.... என்ன அதிசயம்!....பாலு போட்ட வட்டம் மிகச் சரியாக அமைந்தது! பாலுவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி!....
 "என்ன தாத்தா!....ஆச்சரியமா இருக்கு!....எப்படி உங்களால இப்படி ரொம்பச் சரியா ஒரு வட்டம் போட முடிஞ்சுது?....'' என்று ஒரு குரல் கேட்டது!
 அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.
 பாலு தான் கிழவனாகி விட்டதை உணர்ந்தான்... அந்தச் சிறுவனிடம் தன் கோலைக் கொடுத்து, ""முயன்றால் உன்னாலும் இப்படி ஒரு சரியான வட்டம் போட முடியும்!....'' என்று கூறினான்.
 - ச.சண்முகசுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com