இறைவனால் இயலாதது!

இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில் விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார். அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர் என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார். 
இறைவனால் இயலாதது!

இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில் விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார். அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர் என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார். 

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச்  சந்திக்கச் சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர். ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக் கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர். 

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம் வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார். என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக் கேட்டார்.
அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார். ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன் சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். தன் தயக்கத்தை உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, ""பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான். 

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப் பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார். 

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க அனுமதித்தார். 

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,... என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?...''  என்று கேட்டான் சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது ஒன்று இருக்க முடியுமா?... என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின் பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர் என்று நீ சொல்லத் தகுமா?....அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக் கூற இயலுமா?.... அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன் ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா? அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''

சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக விழுந்தார்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com