தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ்

நாஸ்டர்டாமஸ் 1503 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி பிரான்ஸில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இலக்கணம் வானவியல், வடிவவியல், லாஜிக், எண்கணிதம் என எல்லாம் படித்தார். 
தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ்

நாஸ்டர்டாமஸ் 1503 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி பிரான்ஸில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இலக்கணம் வானவியல், வடிவவியல், லாஜிக், எண்கணிதம் என எல்லாம் படித்தார். 
படிப்பை முடித்தவுடன் எட்டு ஆண்டுகள் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பெற்றோரின் விருப்பப்படி மருத்துவம் படித்தார். 
நாஸ்டர்டாமஸ் ஜோதிட நூல்களை வாசித்தபோது அவருக்கு ஜோதிட நூல்கள் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, யூத ஜோதிடர்களிடம் ஜோதிடம் பயில ஆரம்பித்தார். இதற்கிடையே திருமணம் நடந்தது.  நாஸ்டர்டாமஸýக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. நாஸ்டர்டாமலின் இனிய வாழ்க்கையை பிளேக் நோய் சூறையாடியது. மனைவியும், குழந்தைகளும் பிளேக் நோயால் இறந்து போக, வேதனையில் நாடோடியாகத் திரிந்தார்.  1544 ஆம் ஆண்டு மக்ஸ்வெல் நகருக்கு வந்தார். அங்கும் பிளேக் நோய் மக்களைக் கொன்று கொண்டிருந்தது. தான் தயாரித்த ரோஸ் மாத்திரையைக் கொடுத்து பலரை குணப்படுத்தினார். 
நாஸ்டர்டாமஸின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அந்நாட்டின் ராணி காத்தரீனின் மருத்துவ ஆலோசகரானார். இரண்டாவதாக ஆன் என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.  
1565 ஆம் ஆண்டில் மூட்டு வலியால் வீட்டிலேயே முடங்கிப் போன நாஸ்டர்டாமஸ் தன்னுடைய மரணம் எப்போது நிகழும் என்பதை எழுதி வைத்தார். இவர் குறித்த நாளில் 1566 ஆம் ஆண்டு தனது 62 ஆவது வயதில் இறந்து போனார். இவர் எழுதிய, "தி சென்சுரீஸ்' என்ற நூல் இவர் மரணத்துக்குப் பிறகு வெளியானது. 
நாஸ்டர்டாமஸின் முதல் படைப்பு "தி பிராஃபெஸீஸ்'...  (THE PROSPHECIES).
இது 1555 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மூலம்தான் நாஸ்டர்டாமஸ் பிரபலமானார். ஆனால் புத்தகம் பிரபலமானபோது நாஸ்டர்டாமல் உயிரோடு இல்லை. இவரது புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற பல சம்பவங்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே எழுதி வைத்திருந்தார். அத்தனையும் உண்மையாகி ஆச்சரியம் 
பரப்பியது. 
இவரது கல்லறையில் "இங்கே புகழ் பெற்ற நாஸ்டர்டாமஸ் உறங்குகிறார்' என்று பொறித்திருந்தது. 
பிரெஞ்சுப் புரட்சியின் போது மூன்று சிப்பாய்கள் இவரது கல்லறையை உடைத்தார்கள். சவப்பெட்டிக்குள் இருந்த எலும்புக்கூட்டின் கழுத்தில் "மே 1791' என்று பொறிக்கப்பட்ட டாலர் தொங்கியது!  
225 ஆண்டுகளுக்கு முன்பே தனது புத்தகத்தில் இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய கல்லறையை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்டர்டாமஸ் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய புனித குழியை யார் திறக்கிறார்களோ அவர்கள் உடனே இறந்து போவார்கள் என்று எழுதியிருந்தார்.  அதன்படி அந்த மூவருமே துப்பாக்கிக் குண்டு களுக்கு இரையானார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com