அங்கிள் ஆன்டெனா

கொஞ்சம்கூடப் பிசிறு தட்டாமல் அச்சு அசலாக மனிதக் குரல் போலவே இந்த மைனாவுக்கு இருக்கும்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி:
 கிளிகள் மட்டும் நம்மைப் போலப் பேசுகின்றன... மற்ற பறவைகளால் இப்படிப் பேச முடியாததற்குக் காரணம் என்ன?
 பதில்:
 இந்தச் செய்தியைக் கேட்டால் அசந்து போவீர்கள். நம்மைப் போலப் பேசுவதில் அதாவது மனிதக் குரலை மிமிக்ரி செய்வதில் கிளிகளுக்கு முதலிடம் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கிந்திய மலையடிவாரங்களில் வாழும் மலை மைனாவுக்குத்தான் இந்தப் புகழ் சேரும்.
 கொஞ்சம்கூடப் பிசிறு தட்டாமல் அச்சு அசலாக மனிதக் குரல் போலவே இந்த மைனாவுக்கு இருக்கும்.
 கொஞ்சம் பழக்கினால் போதும். நம்மைப் போலவே பல பறவைகளைப் பேச வைக்க முடியும். ஆனால் நமக்கு எளிதாகக் கிடைக்கும் பறவை கிளிதான். அதனால்தான் கிளிகளைப் பிடித்து, "ஹலோ சொல்லு', வேண்டாதவர்கள் வந்தால் "கெட் அவுட்' சொல்லு என்று பழக்கி விடுகிறோம்.
 நிறையப் பறவைகளை பொறுமையுடன் பழக்கினால் பேச வைக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 கைதேர்ந்த தொழில் நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது.
 இது எப்படி?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com