சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி


கேள்வி: மரங்கொத்திப் பறவை மட்டும் ஏன் மரங்களைக் கொத்திக கொண்டிருக்கிறது? இதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?

பதில்: இந்த மரங்கொத்திப் பறவை உலகின் எல்லா பாகங்களிலும் காணப்படுகின்றன. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில்கூட சமயங்களில் நீங்கள் இதைப் பார்த்திருக்கக் கூடும். உறுதியான நீண்டு வளைந்த தனது அலகைக் கொண்டு மரத்தைக் கொத்திக் கொண்டிருக்கும். இது சும்மா பொழுதுபோகாமல் செய்யும் காரியமல்ல.

எல்லாம் ஒரு காரியமாகத்தான். இல்லையில்லை மூன்று காரியங்களாகத்தான்...

  • முதலில்,  இவை மரத்தைக் கொத்தி ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலி ஒரு சீரான வாத்தியம் வாசிப்பது போல இருக்கும். இதன் மூலம் மற்ற மரங்கொத்திப் பறவையுடன் பேச முயற்சிக்கிறதாம். ஆகவே இவை ஒருவகை சிக்னல்கள். 
  • இரண்டாவது, மரப்பட்டைகளில் இடையே சிறிய புழுக்கள் பூச்சிகள் இருக்கும். மரங்கொத்திப் பறவைக்கு இந்தப் பூச்சிகள், புழுக்கள் மீது அலாதிப் பிரியம். அப்படியே சாப்பிட்டு விடும். இது இரண்டாவது காரியம்.
  • மூன்றாவது கூடு கட்டுவதற்குத்தான். நல்ல சரியான, பாதுகாப்பான இடத்தில் மரம் கிடைத்துவிட்டால், மெதுவாகக் கொத்திக் கொத்தி சிறிய பொந்தை உருவாக்கி அதற்குள் சென்று குடித்தனம் நடத்த ஆரம்பித்து விடும். அவ்வளவுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT