கடி

""இங்கே எதோ அருவி இருப்பதாகச் சொன்னாங்களே.....ஒண்ணும் காணோமே!....''
கடி

""இங்கே எதோ அருவி இருப்பதாகச் சொன்னாங்களே.....ஒண்ணும் காணோமே!....''
""யாரோ "ஃபால்ஸ்'  இன்ஃபர்மேஷன் குடுத்திருக்காங்க....''

எம்.ஏ.நிவேதிதா, திருச்சிராப்பள்ளி, 620015.




""ஜோசியரே, நான் பின்னாலே எப்படிஇருப்பேன்?...கொஞ்சம் பாத்து சொல்லுங்க...''
""எங்கே....கொஞ்சம் திரும்பி நில்லுங்க....''

க.சங்கர், கோபிசெட்டிபாளையம். 

""உங்களுக்கு இந்த லெட்டரைக் குடுக்க நான் நாலு கிலோமீட்டர் சைக்கிள்ளே வர வேண்டியிருக்கு!....''
""நீங்க போஸ்ட்லே அனுப்பியிருக்கலாமே?...''

ஜி.பத்மினி, மதுரை

""என்னடி இது?.....ஹெல்மெட்லே பூ ஒட்டி வெச்சிருக்கே?...''
""ஹெல்மெட் போட்டா பூ வெச்சுக்க முடியாதே!....''

பொ.பாலாஜி, அண்ணாமலைநகர் - 608002

""குடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் குடுக்கும்!!!''
""அடடா!....இது தெரியாமப் போச்சே!....நான் கான்கிரீட் தளம் இல்லே போட்டுட்டேன்!...''

எஸ். அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.



""அஞ்சு வயசிலேயே நான் மந்திரியாகணும் ஆசைப்பட்டேன்!... முடியலே...''
""அதான் ஆயிட்டீங்களே!.... அப்புறம் ஏன்  முடியலேங்கறீங்க?...''
""அஞ்சு வயசிலே ஆகமுடியலே இல்லே!...''

ச.சாம்பசிவம், நீடாமங்கலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com