சிறுவர்மணி

க்ரீன் கேபிள்ஸ் ஆனி!

சுகுமாரன்
முடிவு சரிதான்

வானத்தில் நட்சத்திரங்கள் "பிர்' ரங்கள் வழியாகக் கண் சிமிட்டின!
இரண்டு நாட்களுக்குப் பிறகு மாத்யூவின் நல்லடக்கம் நடந்தது. அவென்லீ ஊரே க்ரீன் கேபிள்ஸில் கூடி இருந்தது. 
அடக்கம் முடிந்த பிறகு இயல்பு நிலை திரும்பிவிட்டது. ஆனிக்கு மாத்யூ இல்லாமல் இயல்பு நிலை எப்படி ஏற்படும்?....ஆனிக்கு இந்த துக்கம் புதியது....சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை அவளால் எதையும் சந்தோஷமாக நினைக்கக் கூட முடியவில்லை. டயானாவிடம் சிரித்துப் பேசினால் மனதில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. 
திருமதி ஆலனை ஆனி சந்தித்தாள். அவளுடைய புண்பட்ட உணர்ச்சிகளை அவர் புரிந்து கொண்டார்.  
""மாத்யூ எப்பொழுதும் நீ மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பினார்.'' என்று ஆலன் கூறிய வார்த்தைகள் ஆனியைத் தேற்றின.
""மாத்யூவிற்கு ரோஜாக்கள் பிடிக்கும்.....அவர் கல்லறையில் ரோஜாச் செடிகளை நடப்போகிறேன்...'' என்றாள் ஆனி. 
அடுத்தநாள்.... டவுனுக்கு சிறப்பு கண் மருத்துவர் வந்திருந்தார். அவரிடம் கண்களைப் பரிசோதித்துவிட்டு மரிலா திரும்பினார். 
""டாக்டர் என்ன சொன்னார்?'' என்று ஆனி கேட்டாள். 
""கடுமையான வேலை செய்யக்கூடாது....அப்படிச் செய்தால் இன்னும் ஆறு மாதங்களில் பார்வை போய்விடும்...என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் டாக்டர்''..... என்று சொன்ன மரிலா, ""நான் குருடியாகிவிட்டால் என்ன செய்வேன்?....எப்படி வாழ்வேன்?...'' என்று கண் கலங்கினாள். 
ஆனியின் மனம் திடுக்கிட்டது! அவள் வாழ்க்கையே மாறிவிட்டது. மாத்யூ இறந்துவிட்டார்....மரிலாவின் பார்வை போய்விடும்!....இனி அவள் என்ன முடிவு எடுக்க வேண்டும்?.......
....சிந்தித்தாள்....
சில நாட்கள் சென்றன. க்ரீன் கேபிள்ஸ் தோட்டத்தை விற்று விடப்போவதாக மரிலா, ஆனியிடம் சொன்னாள். ஆனி உதவித் தொகை கிடைத்து கல்லூரிக்குப் போய்விடுவதாலும், மரிலாவுக்கு கண் பிரச்னை இருப்பதாலும் விற்கும் முடிவுக்கு வந்ததாக அவர் அழுகையினூடாக ஆனியிடம் சொன்னார். 
""க்ரீன் கேபிள்ûஸ விற்க வேண்டாம்!...'' என்று சொன்னாள் ஆனி. ""நீங்கள் மட்டும் தனியாக இங்கே இருக்கப் போவதில்லை....நானும்தான் இருக்கிறேன்.... நான் கல்லூரிக்குப் போகவில்லை....உங்களை விட்டுவிட்டுப் போவேன் எனறு எப்படி நினைத்தீர்கள்?...'' என்று உருக்கமாக கேட்டாள் ஆனி!
தன்னுடைய திட்டத்தை சொல்ல அனுமதிக்கும்படி கேட்ட ஆனி, ""க்ரீன் கேபிள்ஸ் தோட்டத்தை அடுத்த வருடத்திலிருந்து மிஸ்டர் பெரிக்கு குத்தகைக்கு விடலாம் என்றும்,...தனக்கு அவென்லீ பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்திருப்பதாகவும் சொன்னாள். 
""ஆனி,...எனக்காக உன் கனவுகளைத் தியாகம் செய்ய வேண்டாம்..... நான் அனுமதிக்க மாட்டேன்!...'' என்றார் மரிலா. 
""க்ரீன் கேபிள்ûஸ விற்பதைவிட எதுவும் மோசமில்லை.... நான் நல்ல டீச்சராக இருப்பேன்!....மரிலா, உங்கள் கண்களையும் காப்பாற்றுவேன்!....'' என்றாள் ஆனி உறுதியாக!
ஆனியின் மாற்றத்தைப் பற்றி கேள்விப்பட்ட திருமதி ரேச்சல் அவளை வெகுவாகப் பாராட்டினார். 
அவென்லீ பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்க முடிவில் கில்பர்ட்டுக்கே வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனிக்காக அதை கில்பர்ட் விட்டுக் கொடுத்தான். 
அடுத்த நாள் காலையில் ஆனி மாத்யூ கல்லறையில் உள்ள ரோஜாப்பூச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள். வீட்டுக்குத் திரும்பும் வழியில் கில்பர்ட்டைப் பார்த்தாள். 
""கில்பர்ட்!...'' எனறழைத்த ஆனி, ""அவென்லீ பள்ளி வேலையை விட்டுக்கொடுத்ததற்கு நன்றி!...'' என்று சொன்னாள். 
""அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் ஆனி...'' என்ற கில்பர்ட்,  ""நான் உன் பின்னலைப் பிடித்து இழுத்ததை மன்னிப்பாயா?'' என்று கேட்டான். 
ஆனி சிரித்தாள். ""இவ்வளவு நாட்கள் உன் மேல் கோபமாக இருந்தது முட்டாள்தனம்...'' என்றாள். 
""நாம் இனி நண்பர்களாக இருப்போம்!...'' என்றான் கில்பர்ட்.
வீடு வரைக்கும் கில்பர்ட் பேசிக்கொண்டு வந்ததைப் பார்த்த மரிலா, ""யாருடன் பேசிக் கொண்டு வந்தாய்?''  என்று கேட்டார். 
""கில்பர்ட்'' என்றாள் ஆனி. 
""நல்ல எதிரிகளாக இருந்தீர்கள்....நல்ல நண்பர்களாகவும் இருங்கள்!'' என்றார் மரிலா. 
இரவு ஆனி கிழக்கு அறை சன்னலோரமாக அமர்ந்திருந்தாள். செர்ரி தோட்டத்திலிருந்து தென்றல் வீசியது. வானத்தில் நட்சத்திரங்கள் "பிர்' மரங்கள் வழியாக கண் சிமிட்டின. 
க்ரீன் கேபிள்ஸில் வாழ்வதற்கு அவள் எடுத்த முடிவு சரிதான் என்று அவை 
சொல்லின. 

முற்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT