இந்தியாவின் இரும்பு மனிதர்!

"ரெஜினால்ட்   ரெய்னால்ட்ஸ்' என்ற ஆங்கிலேய இளைஞர் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.அவர் காந்தியடிகள் அரசுக்கு எழுதும் கடிதங்களை முறையாக தொகுக்கும் பணியை செய்து வந்தார்.
இந்தியாவின் இரும்பு மனிதர்!

7.காந்திஜியும் படேலும்.

"ரெஜினால்ட்   ரெய்னால்ட்ஸ்' என்ற ஆங்கிலேய இளைஞர் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.அவர் காந்தியடிகள் அரசுக்கு எழுதும் கடிதங்களை முறையாக தொகுக்கும் பணியை செய்து வந்தார். அவர் காந்தியுடனான தமது அனுபவங்களை  ‘பர் ப்ண்ஸ்ங் ண்ய் ஙஹய்ந்ண்ய்க்’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.         

"ஒரு முறை நாங்கள் (ரெஜினால்ட்ஸ், காந்தியடிகள், மீரா பென்,வல்லபாய் படேல் மற்றும் பிற உறுப்பினர்கள்) ஆசிரமத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த உள்ளூர் விவசாயி ஒருவர் அங்கு ஒரு கூடை நிறைய காய்கறிகளையும், பழங்களையும் எங்களுக்கு அளித்தார்.அவற்றுள் சில வெங்காயங்களும் இருந்தன. அவற்றை கண்ட ஆசிரம வாசிகளும்,மீரா பென் மற்றும் காந்தியடிகளும் அவற்றை அந்த விவசாயி இடமே மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறினர். காரணம் குஜராத்தில் வைணவ சம்பிரதாயங்களை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் காந்திஜி பிறந்தார்.

வெங்காயம் பூண்டு போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அவர் தவிர்த்தார். காரணம் இப்பொருட்களை உண்பது மாமிசம் உண்பதற்கு சமம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

வல்லபாய் படேல் உடனடியாக குறுக்கிட்டு முதல்முறையாக காந்திஜியின் கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காந்திஜியின் எல்லா கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் படேல் இன்று மறுப்பு தெரிவித்தது!

வெங்காயங்களை கையில் எடுத்துக்கொண்ட படேல், ""நானும் ரெஜினால்டும் அந்த வெங்காயங்களை எடுத்துக் கொள்கிறோம்!'' என்று கூறி பச்சையாகவே அவற்றை உண்ணத் தொடங்கினார். பட்டேல் வெங்காயம் சாப்பிடுவதை காந்திஜியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.""இவற்றின் மேன்மையை ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது!'' என்றார் பட்டே ல் காந்திஜியிடம்.

அன்றிலிருந்து அரைகுறை மனதுடன் ஏதோ சிறிதளவு வெங்காயங்களை காந்திஜி தமது உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கினார்!' என்று  ரெஜினால்ட் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வழக்கறிஞராக இருந்த பட்டேல் ஆரம்ப நாட்களில் சுதந்திரப் போராட்டம் பற்றிய எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தார். ஒருமுறை கிளப் ஒன்றில் அவர் பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு அருகே காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவரது உரையை பட்டேல் அலட்சியமாக கேட்டுக்கொண்டிருந்தார். நேரம் செல்லச் செல்ல விளையாடுவதை கைவிட்டுவிட்டு நேரே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார். காந்தியடிகள் கூறிய பல உண்மைகள் அவரை சிந்திக்கத் தூண்டின. அன்றிலிருந்துதான் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடலானார். தன்னை ஒரு காந்தியின் சீடன் என அறிவித்துக் கொள்வதில் பெருமை கொண்டார்.

மகாத்மா காந்தி மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்!
ஜவஹர்லால் நேரு மக்களால் பெரிதும்  நேசிக்கப்பட்டார்!
சுபாஷ் சந்திர போஸ் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்டார்!

ஆனால் இதுபோன்ற எத்தகைய சிறப்பு தகுதிகளையும் விரும்பாத உண்மையான தலைவராக சர்தார் பட்டேல் திகழ்ந்தார். எனவேதான் காந்திஜியின் சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதில் தீவிரம் காட்டினார் படேல்.      காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் வல்லபாய் படேல் இந்தியாவில் முதல் பிரதமராக வேண்டும் என்று விரும்பினர். ஆனால் காந்திஜியோ ஜவஹர்லால் நேருவை முதல் பிரதமராக்கினார்.  இந்தக் கருத்தில் வேறுபாடு கொண்ட பலர் காந்திஜியை நேரடியாக விமர்சித்தனர். அவர்கள் அனைவரையும் வல்லபாய் பட்டேல் அமைதிப்படுத்தினார்.

சுதந்திரம் அடையப் போகும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி இளைஞராக இருந்தால் மட்டுமே அந்நாட்டில் நிலையான ஆட்சியும் வளர்ச்சியும் ஏற்படும். இதற்கு மாறாக அமைந்துவிட்டால் அரசாங்கம் நிலைகுலையும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாகிஸ்தான் ஆகும். அதன் அதிபராக பொறுப்பேற்ற ஜின்னா பதினோரு மாதங்களிலேயே மறைந்துவிட்டார். அதற்கு பிறகு தலைவர்களுக்குள் நாற்காலி சண்டை ஏற்படத் துவங்கியது. இதனால்தான் இன்றுவரை அந்நாட்டில் ஒரு நிலையான அரசும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை.

இந்த தீர்க்க தரிசனத்தை முன்னமேயே அறிந்துகொண்ட காந்திஜி தாம் அதிகம் மதித்த படேலை விட ஜவஹர்லால் நேருவை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமித்தார் . படேலும்  முழுமனதாக  அதை ஏற்றுக் கொண்டார்.

ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது படேலுக்கோ 72 வயது! ஜவஹர்லால் நேருவுக்கோ 58 வயது!

1930-ஆம் ஆண்டு காந்திஜி உப்பு சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களை கொண்டு சென்று அவற்றை இங்கிலாந்தில் பயன்பாட்டு பொருள்களாக மாற்றி இந்தியாவில் அவற்றை விற்பனை செய்தனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் கப்பல்களில் எடையை சமன் படுத்துவதற்காக உப்பு மூட்டைகளையும் இங்கிலாந்திலிருந்து ஏற்றி வந்தனர். அந்த உப்பையே வாங்க வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்தினர். அதுவரை உப்புக்கு விலை கொடுத்தே அறிந்திராத இந்திய மக்கள் இதனால் கொதித்து எழுந்தனர். இதன் காரணமாகவே உப்பு சத்தியாகிரகம் ஏற்பட்டது.

இந்த தகவல்கள் யாவற்றையும் மக்களுக்கு எடுத்துக்கூற படேல் விரும்பினார். எனவே உப்பு சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்பாகவே பொதுமக்களை சந்திக்க பொதுக் கூட்டம் ஒன்றிற்கு பட்டேல் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு இக்கூட்டத்திற்கு தடைவிதித்தது.மேலும் படேலையும் கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தது.

விடுதலை அடைந்த படே ல் மற்றொரு போராட்டத்திற்கு தயாரானார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியை திலகர் தினமாக அனுசரிக்க வேண்டி பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இம்முறையும் ஊர்வலத்திற்கு அரசு அனுமதி மறுத்தது. தடையை மீறி ஊர்வலத்தை துவக்கினார். மும்பை நகரமே மக்கள் வெள்ளத்தால் திணறியது. ஆங்கிலேயே அரசு பட்டேலைக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.

அரசு அனுமதி மறுத்த பிறகும் இத்தகைய போராட்டங்களை தொடர்வது முட்டாள்தனம் என்று சிலர் படே லை  விமர்சித்தனர்.

ஆனால் படேல்  ""இத்தகைய போராட்டங்களை தொடர்வதன் மூலம் மக்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் அரசுக்கு காட்டலாம். மேலும் மக்களின் சுதந்திர எழுச்சி குறையாமல் இருக்கும்!'' என்றார்.

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com