சிறுவர்மணி

எறும்புகள்!

பாலசுப்பிரமணியன்

காலையில்  வீட்டு வாசலில் சிற்றெறும்புகள் அழகாகஅணி வகுத்து சென்றன. அவைகளை, துன்புறுத்த மனமில்லாமல்  மெல்லிய தோகையுடைய துடைப்பத்தால் பூப்போல் தள்ளி விட்டாள் அம்மா.  கதிர்வேல்அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""அம்மா!...அதுங்க அப்படியும் வீட்டுக்குள்ளே வந்துடுமேம்மா!....'' என்றான் கதிர்வேல்.
""அதுக்காக அவைகளை நாம் கொல்ல முடியுமா?....பாவம் எந்த உயிரையும் கொல்வதற்கு நமக்கு உரிமை இலலை.... முதலில் உயிர்கள் மீது இரக்கம் வேணும்...அது முக்கிய தர்மம்!... வாடிய பயிரையே கண்டு வாடினார் வள்ளலார்!.... "அஹிம்சையே உயர்ந்த தர்மம்' என்கின்றனர் மகான்கள்!...'' எனறாள் அம்மா. 
அன்று காலையில் வழக்கம்போல் கதிர்வேல் பள்ளிக்குச் சென்றான். ஆசிரியர் வகுப்பில் அன்று சாலமன் மன்னனுடைய கதையை மாணவர்களுக்குச் சொன்னார். சாலமன் தன் போர்வீரர்கள் சூழ குதிரையின் மீது வேகமாகச் சென்று கொண்டிருந்தான் . ஓரிடத்தில் தன் குதிரையை நிறுத்தினான்.  தன் பின்னால் தொடர்ந்து குதிரையில் வந்துகொண்டிருந்த  வீரர்களை சைகையினால் நிறுத்தினான்!  வீரர்களும் வியப்புடன்  நின்றனர். சாலமன் தரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். படை வீரர்களும்,  உற்றுக் கவனித்தனர். பாதையின் குறுக்கே சிற்றெறும்புகள் கூட்டம் அணி வகுத்து சென்றன. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, ""சாலமன் மன்னன் தன்னையும், மற்றும்  அனைவரையும் அந்த இடத்தில்  நிறுத்தினான்?.... உங்களுக்குத்  தெரியுமா?''” என்று கேட்டார். 
மாணவர்கள், ""தெரியாது ஐயா!'' என்றார்கள். 
சாலமனுக்கு இரக்க குணம்! அணி வகுத்துச் செல்லும் சிற்றெறும்புக்  கூட்டம் குதிரையின் கால்களால் மிதிபட்டு இறந்து விடும் என்ற பயம் அவனுககு! 
அனைத்து சிற்றெறும்புகளும்  அந்தப் பாதையைக் கடந்து சென்றபிறகுதான் சாலமன் மன்னனும் மற்ற போர் வீரர்களும் அந்தப் பாதையைக் குதிரைகளில் கடந்து சென்றார்கள்.
""அப்படியா சார்!'' என்றனர்  மாணவர்கள்.
நீங்களும் சாலமன் மன்னன் போல் உலகில் உள்ள எல்லா  உயிர்களிடத்திலும் அன்பாகவும்  இரக்கமுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார். கதிர்வேல், அம்மா காலையில் தன் வீட்டு வாசலில் அணி வகுத்து சென்ற சிற்றெறும்புகளை  மெல்லிய தோகையுடைய துடைப்பத்தால் பூப்போல் தள்ளி விட்டு, தன்னிடம் கூறியதை, இப்போது நினைத்துப் பார்த்தான்.  எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டவேண்டும் என்பது அவன்  மனதில் நன்கு பதிந்து விட்டது. 
கதிர்வேல் மாலையில் பள்ளிக்கூடம் விட்டு ,வீட்டுக்கு வந்ததான். அம்மா அவனிடம், ""கதிர்வேல்!.. கை கழுவிட்டு வா நீ சாப்பிடலாம்'' “ என்றாள். கதிர்வேல் வாஷ்பேசின் அருகில் சென்றான்... ""அம்மா இங்கே பாருங்கம்மா!'' என்றான். அம்மாவும் சென்று வாஷ்பேசினைப் பார்த்தாள். வாஷ்பேசினுக்குள் ஒரு சிற்றெறும்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. கை கழுவினால் அதில் ஊர்ந்துகொண்டிருக்கும் அந்த சிற்றெறும்பு இறந்து விடும் என்பதை அவளும் புரிந்து கொண்டாள். ஒரு வெள்ளைத்தாளில் அந்த எறும்பை ஏறவிட்டு அதைத் தோட்டத்தில் கொண்டு விட்டான் கதிர்வேல்! தன் மகன் கதிர்வேல் உயிர் இரக்கத்துடன் நடந்து கொண்டதைப் பார்த்து, அவன் அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT