தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

முன்றுறையரையனார்


கயவற்கு அறிவுரை 
கூறலாகாது

நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. (பா-72)

மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை - தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள் நெருங்கியுள்ள அவையில், அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு, உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும். (க-து.) கயவற்கு உறுதிப் பொருள்களைக் கூறுதலாகாது. 
கடலுளால் மாவடித் தற்று என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT