சிலேடையில்       இளைப்பாறி....

நகைச்சுவையில் பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் ஒன்று சிலேடை. இது சுவையானதோ இல்லையோ சுலபமானது அல்ல.   
சிலேடையில்       இளைப்பாறி....


நகைச்சுவையில் பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் ஒன்று சிலேடை. இது சுவையானதோ இல்லையோ சுலபமானது அல்ல. தமிழகத்தில் தொன்மையான கணித முறையிலே பின்னங்களுக்கு தனித் தனியே பெயர்கள் வழங்கி வந்துள்ளார்கள். முக்கால் என்றால் எல்லோரும் அறிவர். 

மூன்றுக்குக் கீழே நான்கு தீ அரை என்பது பாதி. ஒன்றின் கீழ் இரண்டு ணீ. கால் என்பது நான்கில் ஒன்று - டீ. அரைக்கால் அதிலே பாதி. ஒன்றின் கீழ் எட்டு 1/8 மாகாணி, பதினாறில் ஒரு பங்கு 1/16 மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி. அப்படியானால் மா எது? காணி எது? மா என்பது இருபதில் ஒரு பங்கு 1/20 காணி, எண்பதில் ஒரு பங்கு 1/80 இரண்டும் கூட்டினால் வருவது மாகாணி, மாவும் காணியும் இப்போது நம் வழக்கில் இல்லை.

இந்த வாய்ப்பாட்டை அமைத்துச்  சிலேடையாகப் பாடப்பட்ட பாடல் இது.

"முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்  கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது'

முக்கால்,  அரை, அரைக்கால், மா, இருமா, மாவின் கீழ் அரை என்று ஓடுகிறது பாடல். காளமேகப் புலவர் இந்தக் கணிதப் பெயர்களை வைத்துக் கொண்டே வாழ்க்கையின் கணிதத்தையே கணித்து, மரணத்துக்கு முன்பு இறைவன் திருவருளை நாட வேண்டியதன் அவசியத்தை  நமக்குச் சொல்கிறார்.

"முக்காலுக்கு ஏகாமுன்'- முக்கால்-மூன்று கால்கள். அந்த நிலைக்கு வருவதற்கு முன்பாக.  "முன்னரையலி வீழாமுன்' - முன்னரை- முன் நரை. முற்பட்டு வருகின்ற நரைப் பருவத்தில் விழுவதற்கு முன்பாகவே.

"அக்கா லரைக்கால் கண்டு அஞ்சா முன்' - அக்காலரை - அந்தக் காலரை, எம தூதரை. கால் கண்டு அஞ்சா முன் - கால்கள் பார்த்து நடுங்கும் முன்பாக).  அந்தக் காலரைக் கண்டு கால்கள் தள்ளாடுவதற்கு முன்பாக "விக்கி இருமா முன்' - (இருமாமுன் - இருமுவதற்கு முன்பு). விக்கலும் இருமலும் வந்து பற்றிக் கொள்ளும் முன்பே! "மாகாணிக்கு ஏகாமுன்' - (மாகாணி - பெரிய காணி, பொது நிலமாகிய மயானம்) மயான பூமியை அடைவதற்கு முன்பாக.

"கச்சி ஒரு மாவின் கீழரை' - காஞ்சிபுரத்தில் ஒப்பற்ற மாமரத்தின் கீழ் இருக்கும் ஏகாம்பரேசுவரரை, "இன்று ஓது - இறைவனைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வராமல் இப்போதே ஓதித் துதிப்பாயாக'. இதே கணித முறையில் சென்ற நூற்றாண்டில் அமைந்த சிலேடை ஒன்று...

ஒரு செல்வந்தர். இவர் வீட்டுக்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். செல்வந்தர் துறவியிடம் மிகுந்த மரியாதை உடையவர்.

துறவி வந்த நேரம், செல்வந்தர் மகன் துறவிக்கு மரியாதை தராமல் கால் மேல் கால் தூக்கிப் போட்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த செல்வந்தருக்குக் கோபம் உண்டாயிற்று. கோபத்தை வெளியே காட்ட முடியாத நிலை. தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஏதோ வியாபார விஷயம் பேசுவது போல்,

"ஈரரைக்கால் மேல் நாமாகாணி ஏறி இருக்க
அதை எம்  மாகாணி கொடுத்து இறக்கு' 

என்றார். ஈரரைக்கால் என்றால் (8 ல 1/6)  அதாவது அரை (இந்த இடத்தில் அறை). மொத்த பாட்டின் பொருள்: கால் மேல் கால் ஏறி இருக்க, அதை அறை கொடுத்து இறக்கு என்பதாகும்.

இமயத்துக்குள்ளும் அறிவுக்குள்ளும் பாய்ந்து சென்று உணர்விலே ஒன்றி நின்று பேசுகின்ற ஒண்கவிகளோடு, இத்தகைய எண் கவிகளும், ஒரு மொழிக்கு அவ்வப்போது  வேண்டியதுதானே! வேறு எந்த மொழிக்கும் இல்லாத இந்தச் சிறப்பு தமிழ் மொழிக்குக் கிட்டியது பெரும் பேறாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com