பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

குறுகிய நோக்கம் கொண்ட அன்பு சுயநலத்தையும், தான் என்ற மமதையையும் வளர்க்கிறது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• குறுகிய நோக்கம் கொண்ட அன்பு சுயநலத்தையும், தான் என்ற மமதையையும் வளர்க்கிறது.
- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

• கண்ணால் பார்ப்பதற்கு மாறாகப் பேசாதே. உலகத்தாரோடு இசைந்து நடந்துகொள்.
- ஆத்திசூடி

• தேவி காமாட்சியே! உன் சரணங்களில் அடிவணங்கும் முறையானது சரண் புகுந்தவன் விஷயமாக என்ன என்னதான் செய்யாமல் இருக்கிறது? புகழைப் பெறச் செய்கிறது, இனிய கவிதையைச் செழிக்கச் செய்கின்றது, செல்வத்தை அளிக்கிறது, சொல்ல முடியாத பக்குவ நிலையை மனதில் உண்டாக்குகிறது, சாதுக்களின் ஆசாபாசமற்ற சிக்கலை அவிழ்த்துவிடுகிறது. என்ன என்ன செய்யவில்லை?
- மூக பஞ்சசதி

• கேடு வரும் சமயத்தில் அறிவு குழம்பிப் போகும்; அநியாயம் நியாயமாகத் தோன்றும்; நல்லவை எல்லாம் தீயவை போலவும், தீயவை எல்லாம் நல்லவை போலவும் தோன்றும்.
- மகாபாரதம் (சபா பர்வம்)

• தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர்கள் செய்யும் அநியாயம் அதிகம். பூச்சியால் மனிதர்கள் சாவதில்லை. நோய்களாலும் சாவதில்லை. கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். அன்பு கொள்கையிலே இருந்தால் போதாது. 
செய்கையில் இருக்க வேண்டும்.
- மகாகவி பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com