அக்கினி சூளையிலும் தம் பக்தரை காக்கும் கர்த்தர்!

பக்தி மிகவும் வலிமையானது தெய்வத்திடம் வைக்கும் பற்று, அன்பு, அற்பணிப்பு, மதிப்பு, எல்லாம் தெய்வமே, நம்மை முழுமையாக சரணாகதி அடையும் வலிமையை ஏற்படுத்துகிறது.
அக்கினி சூளையிலும் தம் பக்தரை காக்கும் கர்த்தர்!

பக்தி மிகவும் வலிமையானது தெய்வத்திடம் வைக்கும் பற்று, அன்பு, அற்பணிப்பு, மதிப்பு, எல்லாம் தெய்வமே, நம்மை முழுமையாக சரணாகதி அடையும் வலிமையை ஏற்படுத்துகிறது. பக்தி மன திடத்தை ஏற்படுத்துகிறது. எந்த கஷ்டத்தையும் வேதனையையும் ஏற்றுக்கொள்ளும்.
 வேதத்தில் கடவுளுக்கு உடல்பொருள் வாழ்வு உயிர் அற்பணித்து வாழ்ந்த மூன்று பேரின் வரலாறு காணப்படுகிறது. பேரரசன் நேபுகாத்நேசர் பாபிலோனை ஆண்டார். அவர் பாபிலோனை சுற்றியுள்ள நாடுகளை வென்று அந்நாடுகளில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் கொள்ளையடித்து தன் அரண்மனையில் சேர்த்து வைத்தார். தம் ஆட்சிக்கு பெருமை சேர்க்க சில வாலிபர்களை தேர்ந்தெடுத்து, தனது ஆசிரியர்களை அவர்களுக்கு ஆசிரியராகவும் தான் என்ன உண்கின்றாரோ அந்த உணவையே அவர்களுக்கு கொடுத்து சிறந்த கல்வியாளராகவும் எல்லா சாஸ்திரங்களையும் போர் முறைகளையும் கற்கச் செய்தார்.
 அந்த பயிற்சி முடிவில் சோதித்து அவர்களில் நான்குபேரை தேர்வு செய்து தன் ஆட்சியில் ஆட்சியாளராக பதவி கொடுத்தார். அவர்களில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்.
 நேபுகாத்நேசர் தான் சேகரித்த பெரும் பொன்னைக் கொண்டு அறுபது முழம் உயரமும் ஆறு முழு அகலமுமான ஒரு பொற்சிலையை பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான் (தானியேல் 3: 1).
 கீதவாத்யங்கள் இசைக்கும்போது தேசத்தில் உள்ளவர்கள் அக்கினி சூளையில் தள்ளப்படுவர் என் கட்டளையிட்டான். எல்லாரும் அப்படியே இசைக்கும்போது தாழ விழுந்து வணங்கினர்.
 ஆனால் சாதராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் வணங்கவில்லை. பேரரசனுக்கு தேசமே வணங்கியது. ஆனால் இம்மூவர் வணங்கவில்லை. பேரரசன் கடும் கோபம் கொண்டு அவர்களை அழைத்து வந்து பொற்சிலையை தாழ விழுந்து வணங்கும்படி கட்டளையிட்டான். மூன்றுபேரும் கர்த்தர் ஒருவரையே வணங்குவோம். இப்பொற்சிலையை வணங்க மாட்டோம் என்றார்கள்.
 பேரரசன் கடுங்கோபம் கொண்டு அக்கினி சூளையை ஏழு மடங்கு சூடாக்கி மூன்று பேரையும் கட்டி அக்கினி சூளையில் போட்டுவித்தான். இவர்களை போட போன வீரர்கள் சூளையில் வீழ்ந்து போனார்கள்.
 அக்கினி சூளையில் போட்டவர் சாம்பலாக ஆகி இருப்பர் என சூளையை பார்த்தபோது "இதோ நாலு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நான்காம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது'' என்றான் (தானியேல் 3: 25)
 பேரரசன் சூளையின் வாசற்படி வந்து கடவுளின் தாசர்களே வெளியே வாருங்கள் என்றார். அவர்கள் ஒரு சேதமில்லாமல் வெளியே வந்தார்கள்.
 தேவன் தாமே சூளையில் அவர்களோடு இருந்து நெருப்புக்கு தப்புவித்து காப்பாற்றி தம் பக்தரை காக்கிறவர் கர்த்தரே என அறிந்து பேரரசன் கர்த்தரை போற்றினான். மூன்று பேருக்கும் உயர் பதவி தந்து போற்றினான்.
 தேவன் பேரில் உள்ள பக்தி பெரியது, கர்த்தர் ஒருபோதும் நம்மை கைவிடார். நாம் அம்மூவர் போல் பக்தியாய் வாழ்வோம். நம்மை காக்கும் கர்த்தருக்கே புகழ் உண்டாகட்டும்.
 - பால் பிரேம்குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com