பொன்மொழிகள்!

வாழ்நாள் குறுகியது. அதை மகத்தான ஒரு காரியத்தின் பொருட்டு தியாகம் செய்துவிடுங்கள்.
பொன்மொழிகள்!

மலர்களில் மணம் இருப்பதைப் போலவே இறைவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், அதைப் புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?  

- கபீர்தாசர்

இறைவனின் திருவுள்ளம் இருந்தால் மாயை மனிதனைப் பந்தப் படுத்தாமல் விலகிவிடும்.

- அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்

"எதையும் உங்களால் சாதிக்க முடியும்' என்று நம்புங்கள். "இறைவன் நமது பக்கம் இருக்கிறார்' என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

வாழ்நாள் குறுகியது. அதை மகத்தான ஒரு காரியத்தின் பொருட்டு தியாகம் செய்துவிடுங்கள்.

நமது நாட்டிற்கு வீரர்களே தேவைப்படுகிறார்கள். வீரர்களாகத் திகழுங்கள்.

இந்தியாவையும், உலகம் முழுவதையும் நாம் விழித்
தெழச் செய்ய வேண்டும். உ யிரே போனாலும் நேர்மையுடன் இருங்கள்.  

அறிவாற்றல் பொருந்தியவர்களாகவும், தூய்மை மிக்கவர்களாகவும் இருக்கும் ஒரு நூறு இளைஞர்கள் முன்வாருங்கள். நாம் இந்த உலகத்தையே  மாற்றி அமைக்கலாம்.

- சுவாமி விவேகானந்தர்

உள்ளத்தின் அடிப்படையில் தோன்றும் உயர்வுகள் இறைவனால் அருளப்படுகின்றன. அவை இறைவனைப் போலவே என்றுமே நிலையானவை.

- கெளடில்ய அர்த்த சாஸ்திரம்

தீரனாகவும், தயாளனாகவும், குணவானாகவும், ஆச்சார சீலனாகவும், தர்ம நியாயங்கள் தெரிந்தவனாகவும், விவேகியாகவும் ஒருவன் இருந்தாலும்கூட  அவன் மகாபாவிகளுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளக் கூடாது. 

மாறாக அவனுக்கு மகாபாவிகளாகிய தீயவர்களுடன் எப்போதும் தொடர்பு ஏற்படுமானால், அவர்களின் நடத்தையைப் பின்பற்றி நாளடைவில் இவனும் அவர்களுக்குச் சமமாவது நிச்சயம்.

- அத்யாத்ம ராமாயணம், அயோத்தியா காண்டம்

மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவர்களிடம், இறைவனின் புனிதமான நாமத்தின் பெருமையை எடுத்துச் சொல்ல முயற்சி செய்யாதே.
- சைதன்யர்

அளவுக்கு மீறிய போக வாழ்க்கையால் மனம் வருந்துகிறது; சிந்தனை, வாக்கு, செயல் எல்லாமே இழிவாகின்றன; மாசு படிகின்றன.     

- குருநானக்

எந்த மனிதனிடம் சத்தியம், சாந்தம், புலனடக்கம், தைரியம், உறுதி, சோம்பலின்மை, ஆசையின்மை, சமபுத்தி போன்ற குணங்கள் இருக்கின்றனவோ, அவனிடம் அகில உலகமும் நிலைபெற்றுவிட்டன. அவன் 
உடலில் இறைவன் கோயில்கொண்டிருக்கிறார்.

- பத்ம புராணம்

பக்தியைப் பெற்றவன் பக்தியையே காண்கிறான், அதையே கேட்கிறான், அதையே பேசுகிறான், அதையே சிந்திக்கிறான். 

- தேவரிஷி நாரதர் (பக்தி சூத்திரங்கள்)

உடலுக்கும் குணங்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதாவது, உடல் சீக்கிரமே நாசமடையும்; குணம் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். ஆகவே நற்குணங்களைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும்.

- இதோபதேசம்

செய்நன்றியை மறந்தவனுக்குப் பிராயச்சித்தமே கிடையாது.  

- ராமாயணம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com