கிருத கம்பளத்தில் கிருபாகரன்!

திருமால் "அலங்காரப்பிரியர்" என்றால் சிவபெருமானை "அபிஷேகப் பிரியர்" எனச் சிறப்பித்து அழைப்பர். "ஆடினாய் நறு நெய்யோடு பால் தயிர் என்றும்; "நெய்யும் பாலும் தயிருங்கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றால்"

திருமால் "அலங்காரப்பிரியர்" என்றால் சிவபெருமானை "அபிஷேகப் பிரியர்" எனச் சிறப்பித்து அழைப்பர். "ஆடினாய் நறு நெய்யோடு பால் தயிர் என்றும்; "நெய்யும் பாலும் தயிருங்கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றால்" என்றும் இறைவனை திருமுறைகள் போற்றுகின்றன. ஒவ்வொரு மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் என்னென்ன என்பதை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக "காமிக ஆகமம்" என்னென்னப் பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதனையும், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் கூறுகின்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் ஈசனுக்கு நடைபெறும் அபிஷேக பொருட்களைப்பற்றி தருமை ஆதினத்தைச் சேர்ந்த, "கமலை ஞானப்பிரகாச பட்டாரகர்' அருளிய "புட்பவிதி' என்னும் நூல் குறிப்பிடுகிறது. அதன் பிரகாரம், சித்திரை - மருக்கொழுந்து, வைகாசி - சந்தனம், ஆனி - முப்பழம், ஆடி - பால், ஆவணி - சர்க்கரை, புரட்டாசி - அதிரசம், அப்பம் வகைகள், ஐப்பசி - அன்னம், கார்த்திகை - விளக்கொளி, மார்கழி - நெய், தை - தேன், மாசி - நெய் தோய்த்த கம்பளம், பங்குனி - தயிர் என்பதாகும். மாசி மாத அபிஷேகத்தை "கிருத கம்பளம் சாத்துதல்" எனவும் அழைப்பர். முக்தி தரும் சிறப்பு மிக்க இந்த அபிஷேகம் வெகு சில ஆலயங்களிலே மட்டும் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. அத்தகைய ஆலயம் எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு அங்கு சென்று வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி கிருத கம்பளத்துடன் கிருபாகரனைத் தரிசிப்போம்.
 - கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com