குருஸ்தலம் அருகே குருபீடம்!

ஸ்ரீராமபக்தராக உலகெல்லாம் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு உலகெங்கும், குறிப்பாக, பாரத தேசமெங்கும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ராமாயணத்தில் ஆஞ்சநேயர்தான் 'விஸ்வரூபம்’ எடுத்துள்ளார்
குருஸ்தலம் அருகே குருபீடம்!

ஸ்ரீராமபக்தராக உலகெல்லாம் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு உலகெங்கும், குறிப்பாக, பாரத தேசமெங்கும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ராமாயணத்தில் ஆஞ்சநேயர்தான் 'விஸ்வரூபம்’ எடுத்துள்ளார். கடலைத் தாண்டுவதற்காக ஒரு முறை, அன்னை சீதையின் முன்பு ஒரு முறை, சஞ்சீவிமலை எடுத்துவருவதற்கு ஒரு முறை, என மூன்று முறை ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி விஸ்வரூபம் எடுத்து அருள்பாலித்தார்.
 அந்த விஸ்வரூப கோலத்தில் ஸ்ரீ காஞ்சி மகாசுவாமிகளின் பரிபூர்ண அனுக்கிரஹத்தால் சென்னை நங்கநல்லூரில் 34 அடி உயரத்தில் சிலா விக்ரகத்தை அமைத்து உலகப் பிரசித்தி பெறச் செய்தார்கள் ஸ்ரீ ரமணி அண்ணா என்ற சுப்ரமண்ய சர்மா. மேலும், அவரே 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரை பாண்டிச்சேரி அருகிலுள்ள பஞ்சவடியில் பிரதிஷ்டை செய்து தற்போது மிகச் சிறப்பாக இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் செய்தார்கள்.
 தொடர்ந்து மூன்றாவது முறையாக, கும்பகோணம் அருகேயுள்ள குருஸ்தலமாகிய ஆலங்குடியில் இருந்து ஒரு கி. மீ. முன்பாக ஸ்ரீஞானபுரி சித்ரகூட தலத்தில் 33 அடி உயர ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை உருவாக்கி வருகின்றார்கள். "ஸ்ரீஸங்கட ஹர மங்கள மாருதி' என்னும் திருநாமத்துடன் விளங்கி அருள்பாலிக்க உள்ள இவரது திருவுருவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தியுடன், அஞ்சலி ஹஸ்த கோலத்தில் இடுப்பில் ம்ருத சஞ்ஜீவினி, விஷல்ய கரணீ, சாவர்ணிய கரணீ, ஸந்தான கரணீ என்கின்ற நான்கு வித திவ்ய மூலிகை வேர்களை தன் இடுப்பு வஸ்திரத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டுள்ளார்.
 தனது நீளமான அழகிய வாலின் நுனியில் சிறு மணியைக் கட்டிக்கொண்டு வாலை வலது காலின் பக்கத்தில் வைத்துக்கொண்டு தனது பக்தர்களின் பூத - ப்ரதே - பிசாச பயத்தையும், அப ம்ருத்யு யோகத்தையும், சனிபகவானின் உபத்ரவத்தையும், விஷப் பாம்பு, துஷ்ட
 எதிரிகளின் பீடையையும், பில்லி - சூன்ய தோஷங்களையும் மிதித்து நின்று பக்தர்களை எந்த ஆபத்திலும் காப்பாற்றுவேன் என்று காட்சி தந்து அருள்பாலிக்கும் அற்புத திருமேனி. ஆஞ்சநேயரின் வலது புறத்தில் ஸ்ரீலஷ்மி நரசிம்ம சுவாமியும், இடது புறத்தில் ஸ்ரீசீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமச்சந்தரமூர்த்தி சந்நிதியும் அருள்கூட்டுகின்றன.
 இத்தகைய அற்புத ஆலயத்தை, புனர்நிர்மாணம் செய்து பிரம்ம கும்பாபிஷேகம் நடந்த ஏதுவாக, ஜகத்குரு பதரி சங்கராச்சார்ய சமஸ்தானம், ஸ்ரீ சேஷத்ர சகடபுர ஸ்ரீ வித்யா பீடாதீஸ்வரர் ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகளின் மடத்தில் ஒப்படைத்து உள்ளார்கள்.
 இந்த ஆண்டு, சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீ ஆசார்யமகா சுவாமிகள் ஸ்ரீஞானபுரி சித்ரகூட தலத்தில் ஜூலை 16 -ஆம் நாள் முதல் மேற்கொள்ள இருக்கின்றார்கள். பக்தர்கள் குருஸ்தலம் அருகே உள்ள குரு பீடத்தை தரிசித்து, இவ்வாலயத் திருப்பணியில் பங்கு கொண்டு நலம் பெறலாம்.
 தொடர்புக்கு: 93621 32275 / 98401 60315.
 - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com