பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஒருவன் காயத்ரி ஜபம் மட்டும் செய்பவனாக இருந்தாலும், நான்கு வேதங்களையும் கற்றவனாக இருந்தாலும், கண்டதைப் புசிப்பவனாகவும், கற்றதை விற்பவனாகவும், நன்னடத்தை இல்லாதவனாகவும்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* சேர்த்து வைத்த செல்வம் அனைத்தும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழிந்துவிடுகின்றன; உயர்ந்து நின்றவை ஒரு காலத்தில் சரிந்து தரைமட்டமாகின்றன. எந்த அளவிற்கு நெருங்கிப் பழகுகிறோமோ அந்த அளவிற்குப் பிரிவு நிச்சயம்; சேர்ந்திருந்தது பிரிந்துவிடுகிறது; எத்தகைய வாழ்க்கையும் மரணத்தை முடிவாகக் கொண்டிருக்கிறது.
- ஸ்ரீ ராமபிரான்
* ஒருவன் காயத்ரி ஜபம் மட்டும் செய்பவனாக இருந்தாலும், நான்கு வேதங்களையும் கற்றவனாக இருந்தாலும், கண்டதைப் புசிப்பவனாகவும், கற்றதை விற்பவனாகவும், நன்னடத்தை இல்லாதவனாகவும் இருந்தால் அவன் இழிந்தவனே ஆவான்.
- மனுஸ்மிருதி
* விரும்பாமல் இருந்தும் யாருக்கு இறைவன் அருள் தானாகவே வலிய வந்து கிடைக்கிறதோ, அவர்கள் முற்பிறவிகளில் புண்ணிய காரியங்கள் பலவற்றைச் செய்திருப்பார்கள். அதனால்தான் அவர்களுக்கு இறைவன் திருவருள் எளிதில் கிடைக்கிறது.
- ஸ்ரீ சாரதாதேவியார்
* சான்றோர் இனத்திரு, பெரியாரைத் துணைக்கொள். 
- ஆத்திசூடி
* உலகம், உயிர்கள், இருபத்துநான்கு தத்துவங்கள் போன்றவை எல்லாமே இறைவன் இருப்பதால்தான் இருக்கின்றன. இறைவனை எடுத்துவிட்டால் அவை எதுவும் இருக்காது. ஒன்றுக்குப் பக்கத்தில் பூஜ்யங்கள் போடுகின்ற அளவுக்கு அவற்றின் மதிப்பு அதிமாகிறது. ஆனால், அந்த ஒன்று என்ற எண்ணை நீக்கிவிட்டால், வெறும் பூஜ்யங்கள் எத்தனை போட்டாலும் அவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது. 
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்
* வனத்திலோ போர்க்களத்திலோ பகைவர்களின் நடுவிலோ நீரிலோ, நெருப்பிலோ கடலிலோ மலையுச்சியிலோ உறக்கத்திலோ, கவனமின்மையிலோ கஷ்டகாலத்திலோ பூர்வ புண்ணியச் செயல்கள்தான் ஒருவனைக் காப்பாற்றுகின்றன
- பர்துருஹரியின் நீதி சதகம்
* பெற்றோரையும் மூத்தோரையும் மதித்து நடந்துகொள், அவர்களுக்குப் பணிவிடை செய், தகுந்தவர்களுக்கு தானம் செய், ஒழுக்கநெறிகளைப் பின்பற்று, நல்ல எண்ணங்களையே கொண்டிரு.
- புத்தர் 
* உலகப்பொருட்களின் உண்மை தன்மையை எடுத்துக்கூறி, மனதில் உள்ள துன்பங்களைப் போக்கவல்லது குருநாதரின் கருணை. அது பூரணசந்திரனின் கிரணங்களைப் போன்றும், விரும்பிய வரத்தை அளிக்கும் கற்பகமரம் போன்றும் விளங்குகிறது.
- ஆதிசங்கரர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com