பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வைரம் மற்ற மணிகளை அறுப்பது போல, அவன் செய்த பாவமே அவனை அழித்துவிடும்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• எந்த உயிரிடமும் பகை பாராட்டாமை, 2. மன நிறைவோடிருத்தல், 3. ஒழுக்கத்தைக் கண் போன்று பாதுகாத்தல், 4.கபடமின்மை, 5. தவம் இயற்றுதல், 6. மனதையும் புலன்களையும் கட்டுதல், 7. உண்மையே பேசுதல், 8. தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு தானம் அளித்தல் ஆகிய இந்தக் குணங்களில் ஒவ்வொன்றும் பெரிய பெரிய வேள்விகளுக்குச் சமமாகும்.
- மகாபாரதம்
• மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வைரம் மற்ற மணிகளை அறுப்பது போல, அவன் செய்த பாவமே அவனை அழித்துவிடும்.
- புத்தர்
• இந்த உலகம் எதிலிருந்து பிறந்து வளர்கிறதோ அதுவேதான் பிரம்மம். உலகின் தோற்றம், அது நிலைத்திருப்பது, பிறகு அழிந்து போவது என்ற எல்லாவற்றையும் நடத்தும் சக்தியே பிரம்மம் எனப்படுவது.
- பிரம்ம சூத்திரம்
• முன்பிறவியில் பெறப்பட்ட தத்துவ ஞானத்தாலும், சிறப்பான தர்மம் செய்து பெற்ற பயனின் விளைவாகவும் சமாதி நிலை தோன்றும்.
- நியாய தரிசனம்
• யோகம் என்பது சித்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல்; அதாவது மனதில் எழும் எண்ணங்களை அடக்கியாளுதல் ஆகும்.
- யோக தரிசனம்
• சுகத்திலிருந்துதான் வேதனை பிறக்கிறது. சுகத்திலிருந்துதான் பயம் பிறக்கிறது. சுகத்திலிருந்து விடுபட்டவன் வேதனையையோ பயத்தையோ அறியான்.
- புத்தர்
• எங்கே உழைப்பு இகழப்படுகிறதோ, அங்கே அழிவும் மரணமும் தேக்கமும் உண்டாகி, வளர்ச்சி கடினமாகிறது. எங்கே உழைப்பு விரும்பிப் போற்றப் பெறுகிறதோ, அங்கே வாழ்வும் ஒளியும் வளர்ந்து உழைப்பே இனிமையாக மாறுகிறது.
- சுவாமி ராமதீர்த்தர்
• பரம்பொருளான பரமாத்மாவிடம் குறை எதுவும் கிடையாது. அது குறைபாடு எதுவும் அற்றும், எல்லா தெய்விகக் குணங்களும் பொருந்தியும் விளங்குகிறது.
- பிரம்ம சூத்திரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com