இன்ஸ்ட்டாகிராமிலும் வந்தாச்சு வாய்ஸ் மெசேஜ் வசதி

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இன்ஸ்ட்டாகிராமிலும் வந்தாச்சு வாய்ஸ் மெசேஜ் வசதி

கலிபோர்னியா: பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான ஒன்றாகும். இதுவரை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே  செய்திகளை ஆடியோவாக பரிமாறிக் கொள்ளும் வசதி இருந்து வந்தது. 

இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக 'பாஸ்ட் கம்பெனி' இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இன்ஸ்ட்டாகிராம் செயலியில் தற்போது புதிதாக ஒரு மைக்ரோபோன் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலமாக நீங்கள் விரும்பும் தகவலை ஆடியோவாக பதிவு செய்யலாம். 

வாட்ஸ் அப்பை பொறுத்த வரை ஆடியோவை பதிவு செய்வதற்கு முன்பு யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆனால் இன்ஸ்ட்டாகிராமின் புதிய வசதியில் முதலில் ஆடியோவை பதிவு செய்த பின்பு, தனிநபருக்கோ அல்லது குழுவையோ தேர்வு செய்து அனுப்பும் வசதி உள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com