கஷோகி படுகொலை குறித்து ஐ.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச்
செய்தியாளர் சந்திப்பில் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு.
செய்தியாளர் சந்திப்பில் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு.


செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சக வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசியுள்ளோம். இதுகுறித்து மேற்கொண்டு ஆலோசனை நடத்துவோம்.
ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டின்போது, கஷோகி கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து உண்மையை வெளிக் கொணர, ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகள் விரும்பின என்றார் அவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com