"ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செல்லாது'

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது ஆட்சிக் காலத்தின்போது கொண்டு வந்த கட்டாய மருத்துவக் காப்பீட்டுச் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது ஆட்சிக் காலத்தின்போது கொண்டு வந்த கட்டாய மருத்துவக் காப்பீட்டுச் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து டெக்ஸாஸ் மாகாண நீதிபதி ரீட் ஓகானர் கூறியதாவது: அரசுக் காப்பீட்டை கட்டாயமாக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும். மேலும், ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சட்டத்தில் இருந்து, காப்பீட்டை கட்டாயமாக்கும் அம்சத்தை நீக்க முடியாது. எனவே அந்த திட்டம் சட்டப்படி செல்லாததாகிறது என்று தனது தீர்ப்பில் நீதிபதி ரீட் ஓகானர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, ஒபாமாவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள்
தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com