வந்தாச்சு வந்தாச்சு..! சவுதியிலும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் வாட்..! 

இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக 'வாட்' வரி வசூல் செய்வது என்று அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.
வந்தாச்சு வந்தாச்சு..! சவுதியிலும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் வாட்..! 

ரியாத்: இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக 'வாட்' வரி வசூல் செய்வது என்று அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான நாடுகள். இதுவரை அங்கு எந்த விதமான வரிகளும் வசூலிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் முதன்முறையாக 'வாட்' வரி வசூல் செய்வது என்று அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.

வாட் வரி பட்டியலில் உனவு, ஆடைகள், மின்னணு பொருட்கள், எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி, நீர், மின்விநியோக கட்டணம், சொகுதி விடுதி முன்பதிவு ஆகியவை 5 சதவீத வாட் வரி விதிப்பு பட்டியலின் கீழ் வருகின்றன.  அதேநேரம் மருத்துவ சிகிச்சைகள், நிதி சேவைகள், பொது போக்குவரத்து போன்றவற்றிற்கு தற்சமயம் வாட் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆண்டு வாட் வரி வசூலிப்பின் மூலம் ரூ. 12 பில்லியன் திர்ஹம்(3.3 பில்லியன் டாலர்) தொகை  வசூலாகும் என்று ஐக்கிய அரபு அமீரக வரிவிரிப்புத் துறை மதிப்பிட்டுள்ளது.

வசூலிக்கப்படும் வரியானது உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எதிர்காலத்தில் வருமான வரி விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இருநாடுகளும் தெளிவு படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com