உலகம்

முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறாவது ஆண்டு: உலகத் தலைவர்கள் அஞ்சலி 

DIN

பாரிஸ்:  முதலாம் உலகப் போர் நிறைவடைந்து ஞாயிறுடன் நூறு ஆண்டுகள் நிறைவவடைந்துள்ளதை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

1914-ஆம் ஆண்டு துவங்கி 1918-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர் நிறைவடைந்து ஞாயிறுடன் நூறு ஆண்டுகள் நிறைவவடைகிறது. அதனை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். பாதுகாப்பு காரணமாக டிரம்ப், புதின் ஆகியோர் நடந்து வராமல் கார் மூலம் நேரடியாக நினைவு சின்னத்தை வந்தடைந்தனர். நினைவுச் சின்னத்தில் டிரம்ப்பும் புதினும் கைகுலுக்கி கொண்டனர்.

கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு மவுன ஊர்வலமாக தலைவர்கள் நடந்துவந்து போர்  நினைவு சின்னத்தின் அருகே திரண்டனர். சரியாக காலை 11 மணி அடித்ததும் முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். 

இறுதியாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் உருக்கமாக நிறைவான உரையாற்றினார்.

இந்த முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT