உலகம்

அரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்கள் முடக்கம்

DIN


அரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்கள் மேலும் சிலவற்றை முடக்கியுள்ளதாக முகநூல்(ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு பங்களிக்கும் வகையில் இருந்த முகநூல் பக்கங்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரணை நடத்தி வந்தது. இந்த பக்கங்களுக்கும் ரஷியாவின் இணைய ஆராய்ச்சி அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
இடைத் தேர்தலுக்கு முந்தைய நாளன்று 30 முகநூல் பக்கங்களையும், 85-க்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அந்த பக்கங்கள் இடைத் தேர்தலுக்கான பிரசாரம், எதிர் பிரசாரம் செய்வன என்று காவல் துறை அளித்த தகவலின் படி, பேஸ்புக் நிறுவனம் இந்த முடிவை எடுத்தது. அதையடுத்து அந்த பக்கங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மேலும் சில முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு கொள்கை அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,  தேர்தல் விமர்சனங்கள் நிறைந்த இந்த பக்கங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பக்கங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. தேர்தல் குறித்த விமர்சனங்கள் இந்த பக்கங்களில் அதிகமாக வந்துள்ளது. அதில் இன்ஸ்டாகிராம் பக்கங்களை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அதில் 6 லட்சம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முகநூல் பக்கங்களை 65,000 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கு பின்னால் இருக்கும் குற்றவாளி யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சேலத்தில் பிரதமர் மோடி!

புதிய கூட்டணியில் குக் வித் கோமாளி சீசன் -5: முன்னோட்டக் காட்சி வெளியானது!

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

SCROLL FOR NEXT