கலிஃபோர்னியா காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக உயர்வு

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்
கலிஃபோர்னியா காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக உயர்வு


அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
இது குறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் 5,600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். அதேவேளையில், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் மீட்புக் குழுவினரால் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்கள் மேற்கொண்டு வரும் தேடுதல் வேட்டையில், செவ்வாய்க்கிழமை மேலும் 8 பேரின் உடல்கள் பாரடைஸ் நகரத்தில் இருந்தும், 2 பேரின் உடல்கள் வூல்சே பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில், மழை பெய்யாததால் ஏற்பட்ட அபரிமிதமான வறட்சி காரணமாக கடந்த வியாழக்கிழமை காட்டுத்தீ மூண்டது. அப்போது முதல், காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை சுமார் 1,30,000 ஏக்கர் வனப்பகுதிகள் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன. மேலும், 6,500 வீடுகளும், 260 வளாகங்களும் காட்டுத்தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத்தீயாக இது கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com