உலகம்

சிரியா: அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் 43 பேர் பலி

DIN


சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் காரணாக உயிரிழந்தவர்களில், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் சனிக்கிழமை கூறியதாவது:
இராக்கையொட்டிய சிரியாவின் டெயிர் எஸார் மாகாணத்தில், அமெரிக்க கூட்டுப் படை விமானங்கள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் 36 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் சிறுவர்கள். மேலும், அந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பொதுமக்களா, அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரியவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துப் படையினர் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படையினரின் கூட்டணி தாக்குதல் தொடங்கியதற்குப் பிறகு, அமெரிக்கத் தாக்குதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும் என்றார் அப்தெல் ரஹ்மான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT