உலகம்

ரோஹிங்கயாக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்: ஐ.நா. கண்டனம்

DIN


சொந்த நாட்டிலேயே வேற்று நாட்டவரைப் போல நடத்தப்படும் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன.
ஐ.நா. பொது சபையின் மனித உரிமைகள் குழுவில், இஸ்லாமிய நாடுகள் அடங்கிய அமைப்பின் சார்பாக இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அத்துடன் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் நடத்திய வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் அடங்கிய அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது. 
இந்த தீர்மானத்தில், மியான்மர் ராணுவ அரசால் ரோஹிங்கயாக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அதனால் நாட்டை விட்டு வெளியேறிய 7.23 லட்சம் மக்களின் நிலைக்காகவும் கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பாகுபாட்டினை உடனடியாக நிறுத்துமாறு மியான்மர் அரசை வலியுறுத்தியதுடன், அவர்களுக்கு முறையான குடியுரிமையை வழங்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து அதிகபட்ச பெரும்பான்மையுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சபையில், 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 26 நாடுகள் கலந்து 
கொள்ளவில்லை. 
11 லட்சம் ரோஹிங்கயாக்களை அகதிகளாகக் கொண்டுள்ள வங்கதேசம் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான சீனா, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
இதனிடையே, இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக துருக்கி வெளியுறவு தூதர் பேசுகையில்,  மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக வன்முறை நடைபெற்று வருகிறது. 2017-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் அதற்கு ஒரு உதாரணம்தான். இந்த பிரச்னையை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டுமே, இதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார்.
இந்நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று மியான்மர் விமர்சித்துள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்கயா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் மியான்மரின் பூர்வ குடிகள் இல்லை என்றும் அந்நாட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ரோஹிங்கயாக்கள் அதிகமாக வசிக்கும் ராகைன் பகுதியில் அவர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்திலும், இந்தியாவிலும் அகதிகளாக குடியேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT