உலகம்

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி

DIN

நியூயார்க்: இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியாகியுள்ளது. 

ஆர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு வரும் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்துப் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளதால், புதின் உடனான சந்திப்பை ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

முந்தைய சோவியத் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருந்த நாடுகளான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் அரசுக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு, அந்த நாட்டின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷியா கடந்த 2014-ஆம் ஆண்டில் பலவந்தமாக இணைத்துக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் கிரீமியா கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த உக்ரைன் கடற்படைக்குச் சொந்தமான 3 போர்க் கப்பல்களை ரஷிய கடலோரக் காவல் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதுடன், அந்தக் கப்பல்களை சிறைப்பிடித்தது. மேலும், அந்தக் கப்பலில் வந்த 24 மாலுமிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ரஷியாவின் இந்தச் செயல், உக்ரைனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்று ரஷியாவை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. மேலும், ரஷியா மீது மேலும் சில தடைகளை விதிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தபோது இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி 20 மாநாட்டின்போது புதினை டிரம்ப் சந்திக்கிறார். இந்த சந்திப்பை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT