என்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது: ட்ரம்ப் கிண்டல் 

என்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். 
என்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது: ட்ரம்ப் கிண்டல் 

நியூயார்க்   என்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது இந்தியா குறித்து விமர்சித்தும், கிண்டல் செய்தும் அவர் பேசியதாவது:

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து அதிகமாக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரியைப் பார்த்தால் இந்தியாவை 'வரி மன்னன்' என்றுதான் அழைக்க வேண்டும். 

அமெரிக்காவில் இருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக வரி விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் வரியைக் குறைப்பதாகக் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயிலான உறவு நன்றாகச் செல்கிறது. இந்தியாவின் பிரதமர் மோடி மிகச் சிறந்தவர். இதற்கு முன் இருந்த அதிபர்கள் இதுபோல் இந்தியர்களுடன் பேசியதில்லை. இதைப் பிரதமர் மோடியே என்னிடம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கப் பொருட்களுக்கு தொடர்ந்து அதிகமான வரியை விதிக்கும் போக்கை இந்திய அரசு மேற்கொண்டால், பின்னர் இந்தியப் பொருட்களுக்கும் நாங்கள் கடுமையான வரிவிதிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அமெரிக்காவிடம் எதற்காக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று இந்திய அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்க அதிபரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவே நாங்கள் வர்த்தகம் செய்கிறோம் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

இவ்வாறு ட்ரம்ப் பேசியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com