ஆப்கன் குண்டுவெடிப்பு: வேட்பாளர் உள்பட 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில், அந்த நாட்டுத் தேர்தலில்
பாதுகாப்புப் படையினருடன் அப்துல் ஜாபர் கஹ்ரமான் (கோப்புப் படம்).
பாதுகாப்புப் படையினருடன் அப்துல் ஜாபர் கஹ்ரமான் (கோப்புப் படம்).


ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில், அந்த நாட்டுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கனின் தென் பகுதி மாகாணமான ஹெல்மந்த் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.
இங்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் ஜாபர் கஹ்ரமான், தனது தேர்தல் அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இருக்கை அடியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் அப்துல் ஜாபர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்; மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை தலிபான் பயங்கரவாதிகள் புறக்கணித்துள்ளனர். மேலும், தேர்தலுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரங்களின்போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த வேட்பாளர்களின் எண்ணிக்கை அப்துல் ஜாபருடன் சேர்ந்து 10-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com