வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

அமெரிக்கா: நெருங்கும் ஃபிளாரன்ஸ்' புயல்

DIN | Published: 12th September 2018 01:00 AM


அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த ஃபிளாரன்ஸ்' புயல், அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகள் கழித்து கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் மிக மோசமான புயல் இது' என்று குறிப்பிட்டுள்ளார். ஃபிளாரன்ஸ்' புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

More from the section

ஜிமெயில் மின்னஞ்சலைப் படிக்க இன்னமும் 3வது ஆப்புக்கு அனுமதி வழங்கும் கூகுள்
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: அமெரிக்கா உற்சாக வரவேற்பு 
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு: அமெரிக்கா வரவேற்பு
வியத்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம்
தான்சானியா: விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி