புதன்கிழமை 21 நவம்பர் 2018

கத்திக் குத்துக்கு போதை மருந்து காரணமல்ல'

DIN | Published: 12th September 2018 01:00 AM

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டவர், போதை மருந்து உட்கொண்டிருக்கவில்லை என்று அந்த நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் போதை மருந்தின் தாக்கத்தில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். எனினும், அவரது ரத்த மாதிரியைப் பரிசோதித்ததில், அவர் எந்த போதைப் பொருளையும் உட்கொண்டிருக்கவில்லை என்று தெரிய வந்தது' என்றனர். ஆப்கனைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கத்தியாலும், இரும்புக் கம்பியாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர்.
 

More from the section

இன்னுமா தூக்கியெறியப் போகிறீர்கள்? சற்று யோசியுங்கள்!
3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகல்
தென்சீன கடல்பகுதியில் இந்தியாவும், வியத்நாமும் விதிகளை கடைப்பிடிக்கின்றன: ராம்நாத் கோவிந்த்
இறக்குமதி வரி அதிகரிப்பு: உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா முறையீடு