தென் கொரிய அதிபருக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு: இன்று அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை

வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் கொரிய அதிபருக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு: இன்று அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை

வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
3-ஆவது கொரிய மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வட கொரிய தலைநகர் பியாங்கியோங்கிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.
அவரை, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் சென்று, கட்டித் தழுவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆளும் மக்கள் கட்சி அலுவலகத் தலைமையகத்துக்குச் சென்றனர். அப்போது வழி நெடுகிலும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் மூன் ஜே-இன்னுக்கு வரவேற்பு அளித்தனர் . மேலும், ஒன்றுபட்ட கொரியா' என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
மக்கள் கட்சி தலைமை அலுவலத்தில் மூன் ஜே-இன் பேசியதாவது:
அதிபர் கிம் ஜோங்-உனுக்கும், எனக்கும் தற்பொழுது மிகப் பெரிய பொறுப்புச் சுமை இருப்பதை நன்கு அறிவேன்.
இந்த உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும் முக்கிய கடமை எங்களுக்கு உள்ளது.
தற்போது நடைபெறும் 3-ஆவது கொரிய மாநாட்டில் இரு கொரிய நாட்டு மக்களுக்கும் பரிசளிக்கும் வகையிலான நல்ல தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.
அப்போது கிம் ஜோங்-உன் பேசியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த அதிபர் மூன் ஜே-இனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தப் பேச்சுவார்த்தை மூலம், கொரிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்படுதவற்கான வழி திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கிம் ஜோங்-உனுக்கும், மூன் ஜே-இனுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை புதன்கிழமை (செப். 19) தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com