பேச்சுவார்த்தை ரத்துக்கு இந்தியா கூறும் காரணம் பொருத்தமற்றது: பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பை ரத்து செய்தமைக்கு இந்தியா கூறும் காரணம் பொருத்தமற்றது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 
பேச்சுவார்த்தை ரத்துக்கு இந்தியா கூறும் காரணம் பொருத்தமற்றது: பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பை ரத்து செய்தமைக்கு இந்தியா கூறும் காரணம் பொருத்தமற்றது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் வியாழக்கிழமை விடுத்த கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதன்படி, அடுத்த வாரம் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்முத் குரேஷியும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும், இந்திய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியை புகழும் வகையில் பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டதை அடுத்தும் இந்த சந்திப்பை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. 

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி கூறுகையில், 

"எங்களுடைய நல்லெண்ண அழைப்பை முதலில் ஏற்றுக்கொண்டு, பிறகு அதனை நிராகரித்திருக்கும் விதம் எனக்கு வருத்தமளிக்கிறது. நாம் பேசி, நமது பிரச்னைகளை தீர்த்திருந்தால் அனைவரும் நன்மை அடைவார்கள் என்ற பார்வையில் நாங்கள் இருந்தோம். எங்களுடைய அழைப்பை முதலில் ஏற்றுக்கொண்டனர். ஆனால், பிறகு காரணம் சொல்கின்றனர். ஜூலை மாதம் நிகழ்ந்த சம்பவத்தை செப்டம்பர் மாதம் காரணம் காட்டுவது பொருத்தமற்றது" என்றார் அவர்.  

முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையை நிராகரித்திருப்பது, இந்தியாவின் இறுமாப்பை காட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com