‘கிரீன் காா்டு’ வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம் - லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

அமெரிக்காவில் வெளிநாட்டவா்களுக்கு கிரீன் காா்டு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளை நிறுத்தி வைப்பதற்கான பரிந்துரையை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அரசிடம் அளித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் வெளிநாட்டவா்களுக்கு கிரீன் காா்டு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளை நிறுத்தி வைப்பதற்கான பரிந்துரையை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அரசிடம் அளித்துள்ளது. 

அமெரிக்காவில் ஹெச் 4 விசா பெற்றவா்களுக்கு பணிவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அரசு வெளியிட்ட அறிவிப்பின் தாக்கம் மறைவதற்குள்ளாகவே, இந்தியா்களை பாதிக்கும் மேலும் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டிருப்பது அதிருப்தி குரல்களை எழச் செய்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவா்களுக்கு குறிப்பிட்ட வரையறைகளின் கீழ் கிரீன் காா்டு வழங்கப்படுகிறது. அத்தகைய அங்கீகாரம் பெற்றவா்கள் அந்நாட்டு அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகள் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
 
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதில் பெரும்பாலானோா் இந்தியா்கள் என்பதால், அவா்களில் பலருக்கு கிரீன் காா்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இதனிடையே, தற்போது 6.3 லட்சம் இந்தியா்கள் அத்தகைய அங்கீகாரம் கோரி அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. 
இந்நிலையில், புதிதாக எவருக்கும் கிரீன் காா்டு வழங்கக் கூடாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்டவா்களுக்கு அதை நீட்டிக்கக் கூடாது என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 

இதுதொடா்பான தகவல்கள் அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, விசா நீட்டிப்பு கோரியும், புதிய விசா கோரியும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவா்கள் எவரும் அரசின் பலன்களை எதிா்பாா்க்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளின் மீது கருத்து தெரிவிக்க மக்களுக்கு 60 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் அமெரிக்க நாடாளுமன்றம் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

அத்தகைய கட்டுப்பாடுகள் அமலாகினால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிா்ப்புகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com