உலகம்

ஸ்விட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தினமணி

ஸ்விட்சர்லாந்து சரக்கு கப்பல் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பல் பணியாளர்கள் 12 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.
 இதுகுறித்து மாúஸாயல் கப்பல் நிறுவனம் தெரிவித்ததாவது:
 சரக்குகளை ஏற்றிச் செல்லும் எம்பி கிளாரஸ் கப்பல், 19 பணியாளர்களுடன் போனி தீவுக்கு அருகே 45 கடல் மைல் தொலைவில் நைஜீரிய கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கிளாரஸ் கப்பலை முற்றுகையிட்டு நீண்ட ஏணிகளை பயன்படுத்தி கடற்கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். கப்பலில் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தீயிட்டு கொழுத்திய கடற் கொள்ளையர்கள் பணியாளர்கள் 19 பேரில் 12 பேரை கடத்தி சென்று விட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT