'வறுமையில் இருக்கும் மக்களை நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்துகிறது': இந்தியா குறித்து டிரம்ப் கருத்து

வறுமையில் இருக்கும் மக்களை இந்தியா நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்துகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஐநா கூட்டத்தில் தெரிவித்தார்.

ஐநா சபையின் 73-ஆவது பொதுக் குழு கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த கதைகளை எடுத்துக் கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா குறித்து பேசினார். 

இந்தியா தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா வறுமையில் இருக்கும் மக்களை நடுத்தர வர்கத்துக்கு உயர்த்துகிறது என்றார்.  

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் வைத்து அவரிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மோடியிடம் இருந்து அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துகளை பெற்று வந்ததாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய அன்பையும் வாழ்த்துகளையும் என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com