என்னைப் பார்த்து அல்ல.. என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள்: ஐ.நா சபையில் சமாளித்த ட்ரம்ப் 

ஐ.நா சபை உரையின் பொழுது என்னைப் பார்த்து சிரிக்கவில்லை;  என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமாளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. 
என்னைப் பார்த்து அல்ல.. என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள்: ஐ.நா சபையில் சமாளித்த ட்ரம்ப் 

நியூயார்க்: ஐ.நா சபை உரையின் பொழுது என்னைப் பார்த்து சிரிக்கவில்லை;  என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமாளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொதுச் சபை கூட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு உலகத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார். 

இந்நிலையில் ஐ.நா சபை உரையின் பொழுது என்னைப் பார்த்து சிரிக்கவில்லை;  என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமாளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. 

ட்ரம்ப் தன்னுடைய உரையின் பொழுது தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மற்ற அதிபர்களின் பதவிக்காலத்தை விட அமெரிக்கா அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த சில உலகத் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரித்து விட்டனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத ட்ரம்ப் , 'நான் இந்த எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை'  என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து சிரித்து சமாளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொது இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஐ.நா சபை உரையின் பொழுது தலைவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை;  என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள்' என்று கூறி விட்டு அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com