பாகிஸ்தான்- முறைகேடு குற்றச்சாட்டு: சிந்து மாகாண பேரவைத் தலைவர் கைது

முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ்  பாகிஸ்தானின் சிந்து மாகாண சட்டப் பேரவைத் தலைவர் ஆகா சிராஜ் துரானியை அந்த நாட்டு ஊழல் தடுப்பு காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.


முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ்  பாகிஸ்தானின் சிந்து மாகாண சட்டப் பேரவைத் தலைவர் ஆகா சிராஜ் துரானியை அந்த நாட்டு ஊழல் தடுப்பு காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
பாகிஸ்தான் வரலாற்றில், மாகாண சட்டப் பேரவைத் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே  முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிந்து மாகாண பேரவைத் தலைவர் ஆகா சிராஜ் துரானி, தனது வருவாய்க்கு மீறி சொத்துகளைச் சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பாக அவரைக் கைது செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சட்ட விரோத நியமனம், அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி, வருவாய்க்கு மீறிய சொத்து சேர்ப்பு ஆகிய பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆகா சிராஜ் துரானி மீது ஊழல் தடுப்பு அமைப்பு தெரிவித்து வருகிறது.
எனினும், துரானியின் சொந்த மாகாணத்தில் அவருக்கு பாதுகாப்பு அதிகம் இருப்பதாலும், அவரை அங்கு கைது செய்தால் கலவரம் வெடிக்கும் சூழல் இருந்ததாலும் அவரை கைது செய்யாமல் அதிகாரிகள் காத்திருந்தனர். இந்த நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத் வந்த துரானியை ஊழல் தடுப்பு அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிபி எதிர்ப்பு: சிந்து மாகாண பேரவைத் தலைவர் ஆகா சிராஜ் துரானி கைது செய்யப்பட்டுள்ளதை, அந்த மாகாணத்தின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கடுமையாகக் கண்டித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com