ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம்

ஐ.நா. சபைக்கான புதிய அமெரிக்க தூதராக கெல்லி நைட் கிராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது கனடாவுக்கான தூதராக உள்ளார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம்

ஐ.நா. சபைக்கான புதிய அமெரிக்க தூதராக கெல்லி நைட் கிராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது கனடாவுக்கான தூதராக உள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது ராஜிநாமா முடிவை அறிவித்தார். அவரது ராஜிநாமாவை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார். எனினும் புதிய தூதர் நியமிக்கப்படும் வரையில் நிக்கி ஹேலி அப்பதவியில் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான புதிய தூதராக கெல்லி கிராஃப்ட்டை டிரம்ப் நியமித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை, டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கெல்லி கிராஃப்ட், ஐ.நா.வின் அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவுக்கான தூதராக பதவி வகித்த காலத்தில் பல அளப்பரிய பணிகளை அவர் செய்துள்ளார். 

அவரது தலைமையின் கீழ், ஐ.நா.வில் மிக உயர்ந்த அளவில் அமெரிக்கா பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கெல்லி கிராஃப்டுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்தில், கெல்லி கிராஃப்ட்டுக்கு நிக்கி ஹேலி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஐ.நா.வில் அமெரிக்கா சார்பில் கெல்லி கிராஃப்டின் குரல் ஓங்கி ஒலிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தப் பதவிக்குப் பிரபல செய்தியாளரான ஹெதர் நோவர்ட்டை நியமிக்க டிரம்ப் தேர்வு செய்திருந்தார். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக, அந்தப் பதவியை ஏற்க இயலாது என்று ஹெதர் நோவர்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com