இந்திய அமெரிக்கருக்கு "ரோசா பார்க்ஸ்' விருது

அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த  கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கெளரவித்த

அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த  கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கெளரவித்துள்ளது.
அமெரிக்காவில் இன்டியானாபோலிஸ் பகுதியைச் சேர்ந்த குரிந்தர் சிங், தொழில்முனைவோராகவும், சீக்கிய அரசியல் குழுவின் தலைவராகவும் உள்ளார். அவர் கடந்த 2007-ஆம் ஆண்டு விமானத்தில் பயணிக்க சென்றபோது, அவரது தலைப்பாகையை கழட்டிவிட்டு விமானத்தில் பயணிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு  அவர் மறுப்பு தெரிவித்ததால், பயணம் செய்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதையடுத்து அமெரிக்காவில் உள்ள சீக்கிய மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, சீக்கியர்களுக்கு எதிரான இந்த கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டார். மேலும், சீக்கிய மக்கள் 67, 000 பேர் இணைந்து இந்த பிரச்னையை அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கொண்டு சென்றனர். அதையடுத்து அந்த நடைமுறையை ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு நாடாளுமன்றம் உத்தரவிட்டது.  அதன் விளைவாக, தற்போது அமெரிக்காவில் விமானப்பயணத்தின்போது சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து செல்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், குரிந்தர் சிங்கின் இந்த நடவடிக்கையை பாராட்டி, "இன்டியானா' நாளிதழ் அவருக்கு "ரோசா பார்க்ஸ் முன்னோடி' விருது வழங்கி கெளரவித்துள்ளது. 
அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே வெள்ளையின மக்கள் காட்டிய  பாகுபாட்டை களைவதற்காக போராடிய ரோசா பார்க்ஸ் என்ற பெண்மணியின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com