கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி 

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 
கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி 

பெய்ஜிங்: கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 

உலகில்  பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளில்  சீனாவும் ஒன்று. உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவின் பங்கு முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. 

இந்நிலையில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 

இதுதொடர்பாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவானது, 
தொடர்ந்து மெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டதன் விளைவாக சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையானது சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com