மெக்ஸிகோ பெட்ரோல் குழாய் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு

மெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது. 
மெக்ஸிகோ பெட்ரோல் குழாய் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு

மெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: லஹூலில்பன் நகரில், பெட்ரோல் குழாய் வெடி விபத்து நேரிட்ட பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்ஸிகோவின் லஹூலில்பன் நகரில், பெட்ரோல் கொண்டு செல்லும் குழாயில் வெள்ளிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு பெட்ரோல் திருடப்பட்டபோது, அந்த விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்து காரணமாக அங்கு பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருந்த 66 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 73-ஆக அகதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 74 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் குழாய்களில் துளையிட்டு பெட்ரோல் திருடப்படுவது மெக்ஸிகோவின் மிகப் பெரிய சமூக - பொருளாதாரப் பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து மெக்ஸிகோ அதிபராகப் பெறுப்பேற்றுள்ள ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர், பெட்ரோல் திருட்டைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் குழாய்கள் மூடப்பட்டன.
இதன் காரணமாக, பெரும்பாலான இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். 
இந்தச் சூழலில், தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது மனுவெல் ஒப்ராடோர் அரசுக்கு சிக்கலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com