ஆப்​கன் உள​வுத் துறை பயிற்​சி​ய​கத்​தில் தலி​பான்​கள் தாக்​கு​தல்: 65 பேர் பலி

ஆப்​கன் உள​வுத் துறை பயிற்சி மையத்​தில் தலி​பான் பயங்​க​ர​வா​தி​கள் நடத்​திய தாக்​கு​த​லில் 65 பேர் உயி​ரி​ழந்​த​தாக அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை தெரி​வித்​த​னர்.
தலிபான்களின் தாக்குதலில் சேதமடைந்த ஆப்கன் உளவுத் துறை பயிற்சியகம்.
தலிபான்களின் தாக்குதலில் சேதமடைந்த ஆப்கன் உளவுத் துறை பயிற்சியகம்.


ஆப்​கன் உள​வுத் துறை பயிற்சி மையத்​தில் தலி​பான் பயங்​க​ர​வா​தி​கள் நடத்​திய தாக்​கு​த​லில் 65 பேர் உயி​ரி​ழந்​த​தாக அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை தெரி​வித்​த​னர்.
முத​லில் வெடி​பொ​ருள் நிரப்​பிய காரை பயங்​க​ர​வா​தி​கள் அந்​தப் பயிற்சி மையத்​தில் மோதி வெடிக்​கச் செய்​த​தா​க​வும், அத​னைத் தொடர்ந்து காரில் வந்த பயங்​க​ர​வா​தி​கள் அந்த மையத்​தில் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​ய​தா​க​வும் தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன.
இது​கு​றித்து அதி​கா​ரி​கள் கூறி​ய​தா​வது:
வர்​தாக் மாகா​ணத் தலை​ந​கர் மைதான் ஷஹ​ரில், ஆப்​கன் உளவு அமைப்​பான தேசி​யப் பாது​காப்பு இயக்​கு​ந​ர​கத்​தின் பயிற்​சி​ய​கம் அமைந்​துள்​ளது.
அந்த மையத்​துக்கு வெடி​பொ​ருள் நிரப்​பிய காரை திங்​கள்​கி​ழமை ஓட்டி வந்த 
பயங்​க​ர​வாதி, அதனை பயிற்​சி​ய​கக் கட்ட​டத்​தில் மோதி வெடிக்​கச் செய்​தார்.
சக்தி வாய்ந்த அந்த குண்​டு​வெ​டிப்​பில் பயிற்​சி​கத்​தின் கூரைச் சுவ​ரில் ஒரு பகுதி இடிந்து விழுந்​தது.
அத​னைத் தொடர்ந்து, காரில் வந்த 3 பயங்​க​ர​வா​தி​கள் அந்த பயிற்சி மையத்​துக்​குள் நுழைந்து சர​மா​ரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்ட​னர்.
உட​ன​டி​யாக, அந்த 3 பயங்​க​ர​வா​தி​க​ளை​யும் பாது​காப்​புப் படை​யி​னர் சுட்டுக் கொன்​ற​னர்.
எனி​னும், கார் குண்டு வெடிப்​பில் கூரைச் சுவர் இடிந்து விழந்​த​தில் பெரு​ம​ள​வில் உயிர்ச் சேதம் ஏற்​பட்​டது என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.
65 பேர் பலி:​ இந்​தத் தாக்​கு​த​லில் 12 பேர் உயி​ரி​ழந்​த​தாக தொடக்​கத்​தில் தெரி​விக்​கப்​பட்​டா​லும், சம்​ப​வப் பகு​தி​யி​லி​ருந்து 65 உடல்​கள் மீட்கப்​பட்​ட​தாக அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை தெரி​வித்​த​னர்.
இது​கு​றித்து வர்​தாக் மாகாண கவுன்​சில் துணைத் தலை​வர் முக​மது சர்​தார் பக்​யாரி கூறு​கை​யில், தாக்​கு​த​லில் இடிந்து விழுந்த உள​வுத் துறை பயிற்​சி​ய​கக் கட்ட​டத்​தின் இடி​பா​டு​க​ளி​லி​ருந்து 65 உடல்​கள் மீட்கப்​பட்​ட​தா​கத் தெரி​வித்​தார்.
​மி​கப் பெரிய இழப்பு: ​த​லி​பான்​கள் தாக்​கு​த​லில் உள​வுத் துறை​யி​னர் உயி​ரி​ழந்​தது, ஆப்​க​னுக்கு மிகப் பெரிய இழப்பு என்று வர்​தாக் மாகாண கவுன்​சில் தலை​வர் அக்​தார் முக​மது தாஹிரி தெரி​வித்​துள்​ளார்.
இது​கு​றித்து அவர் கூறி​ய​தா​வது.
ஆப்​கன் காவல் துறை​யி​னர் மற்​றும் ராணு​வத்​தி​ன​ரை​விட உள​வுத் துறை வீரர்​க​ளுக்கு மிகக் கடு​மை​யான பயிற்​சி​யும், அதி நவீன ஆயு​தங்​க​ளும் அளிக்​கப்​ப​டு​கின்​றன. 
அவர்​க​ளது இழப்பு, ஆப்​கா​னிஸ்​தா​னுக்கு மிகப் பெரிய பேரி​ழப்​பா​கும் என்​றார் அவர்.
பொது​வாக, தலி​பான் பயங்​க​ர​வா​தி​க​ளுக்​கும், பாது​காப்​புப் படை​யி​ன​ருக்​கும் இடை​யி​லான மோதல் குளிர்​கா​லங்​க​ளில் மித​மா​கவே காணப்​ப​டும்.
எனி​னும், அதற்கு மாறாக, அண்​மைக் காலங்​க​ளில் பாது​காப்​புப் படை​யி​னர் மீதான தாக்​கு​தலை தலி​பான்​கள் தீவி​ரப்​ப​டுத்​தி​யுள்​ள​னர்.
லோகர் மாகா​ணத்​தில் தலி​பான் பயங்​க​ர​வா​தி​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை நடத்​திய தாக்​கு​த​லில் 7 பாது​காப்​புப் படை​யி​னர் உயி​ரி​ழந்​தது நினை​வு​கூ​ரத்​தக்​கது.

பலி எண்​ணிக்​கை​யில் குழப்​பம்...

​மை​தான் ஷஹர் உள​வுத் துறை பயிற்சி மையத்​தில் தலி​பான்​கள் நடத்​திய தாக்​கு​த​லில் எத்​தனை பேர் உயி​ரி​ழந்​த​னர் என்​பது குறித்து முன்​னுக்​குப் பின் முர​ணான தக​வல்​கள் தெரி​விக்​கப்​பட்டு வரு​கின்​றன.
இந்​தத் தாக்​கு​த​லில் 12 பேர் மட்டுமே உயி​ரி​ழந்​த​தாக முத​லில் அதி​கா​ரி​கள் தெரி​வித்​தா​லும், திங்​கள்​கி​ழ​மையே 65 உடல்​கள் மீட்கப்​பட்​ட​தாக வர்​தாக் மாகாண கவுன்​சில் துணைத் தலை​வர் செவ்​வாய்க்​கி​ழமை தெரி​வித்​தார்.
இதற்​கி​டையே, பெயர் வெளி​யிட விரும்​பாத பாது​காப்​புத் துறை அதி​காரி ஒரு​வர், தாக்​கு​த​லில் 70 பேர் பலி​யா​ன​தா​கத் தெரி​வித்​தார்.
எனி​னும், 100-க்கும் மேற்​பட்​ட​வர்​கள் உயி​ரி​ழந்​த​தாக உறுதி செய்​யப்​ப​டாத தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன.
தாக்​கு​தல் நடத்​தப்​பட்ட மையம் ஆப்​கன் உள​வுத் துறை​யி​ன​ருக்​கான பயிற்​சி​ய​கம் என்​ப​தால், அங்கு பயிற்சி பெறு​ப​வர்​க​ளின் எண்​ணிக்கை உள்​ளிட்ட விவ​ரங்​க​ளைப் பெறு​வது கடி​னம்; எனவே, 
உயி​ரி​ழந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை குறித்து உறு​தி​யான தக​வ​லைப் பெற முடி​ய​வில்லை என்று கூ​றப்​ப​டு​கி​ற​து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com