ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர வேண்டும்: 10 லட்சம் பேர் ஆன்லைன் மனு

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற வலைதளத்தில் 10 லட்சம் பேர்  மனு


ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற வலைதளத்தில் 10 லட்சம் பேர்  மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரிட்டன் நாடாளுமன்ற வலைதளத்தில் இந்த மனுவில் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முயன்றதால் அந்த வலைதளமே பல மணி நேரம் முடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியினரின் அழுத்தத்தினால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்த அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் முடிவெடுத்தார். மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற வாக்கெடுப்பு முடிவு வெளியாகியது. இந்த வெளியேற்ற முடிவு பிரெக்ஸிட் என்று அறியப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் வழங்கியது.  இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற வந்தது. பொருளாதார ரீதியாக பிரிட்டனுக்கு பெரும் இழப்பு நேரும் என்ற நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறக் கூடாது என்ற கருத்து அந்நாட்டில் வலுப்பெறத் தொடங்கியது. இதனிடையே, நாடாளுமன்ற வலைதளத்தில் பிரெக்ஸிட் நடவடிக்கையை நிறுத்தி, ஐரோப்பிய யூனியன் அமைப்பில் தொடர வேண்டும் என்ற கோரிக்கை மனு அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் 10 லட்சம் பேருக்கு மேல் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர்.  ஒரு லட்சம் பேர் அளிக்கும் மனு தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்பது அந்நாட்டு விதிமுறை. இந்நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை நிறுத்த 10 லட்சம் பேர் ஆன்லைன் வழியே மனு செய்துள்ளனர்.
2016-இல் பொது வாக்கெடுப்பில் தனது விருப்பத்துக்கு மாறான முடிவு வெளியானதையடுத்து, தனது பிரதமர் பதவியை டேவிட் கேமரூன் ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com