துபையின் உயரிய கட்டடத்தில் நியூஸி. பிரதமர் புகைப்படம் ஒளிபரப்பு

நியூஸிலாந்து பிரதமரின் நடவடிக்கையை கௌரவிக்கும் விதமாக துபையில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய புகைப்படத்தை ஒளிபரப்பினர். 
துபையின் உயரிய கட்டடத்தில் நியூஸி. பிரதமர் புகைப்படம் ஒளிபரப்பு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளுக்குள் புகுந்து நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில், 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.  இச்சம்பவம் நியூஸிலாந்திலும், மற்ற வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்கள் வைத்துள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நியூஸிலாந்து பிரதமரின் நடவடிக்கையை கௌரவிக்கும் விதமாக துபையில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய புகைப்படத்தை ஒளிபரப்பினர். மேலும் 1.5 பில்லியன் முஸ்லிம்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக துபை துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com