உலகம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இடமில்லை: இம்ரான் கான்

DIN


பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாத கலாசாரத்துக்கும் பாகிஸ்தானில் இடமில்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது, இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
 இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடியும்வரை, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றநிலையே காணப்படும். எனவே, எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்கிறது. 
பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தானுக்குப் பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க இந்தியா முயன்று வருகிறது. அவ்வாறு நடந்தால், இந்தியாவின் பொருளாதாரமே பாதிக்கப்படும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய செயல்திட்டத்துக்கு, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையிலேயே பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாத கலாசாரத்துக்கும் பாகிஸ்தான் மண்ணில் இடமில்லை. அதற்காக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான், அமைதியை விரும்பும் நாடு என்பதை மட்டும் அல்லாமல், ஜிஹாதி கலாசாரத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கும் நாடு என்பதையும் உலகுக்கு எடுத்துக்காட்ட அரசு முயன்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT