முதலாளித்துவம்

Image courtesy: shutterstock
Image courtesy: shutterstock

முதலாளித்துவம்

(Capitalism)

முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன. பல நூற்றாண்டுகள் கொண்ட சிக்கலான வரலாற்றை சுருக்கிக் கூற நினைப்பது ஒரு சிரமமானது தான். இருந்தும் அரசியலில் தவிர்க்க முடியாத பகுதி இது. இருந்தும் சுருக்கமாக காண்போம்.

கார்ல் பொலொனி (Karl Polanyi) முதலாளித்துவத்தின் பிறப்பு அதற்கு முந்தைய சமுதாய இயக்கங்களோடு ஒரு உண்மையான பிளவை ஏற்படுத்துகிறது. “சந்தைகளோடு செயல்படும் சமுதாயங்கள்’ என்றும் ”சந்தைச் சமுதாயங்கள்” என்றும் ஓர் அடிப்படை வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. ஆகவே சந்தை என்பது முதலாளித்துவத்தைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது, சந்தை என்பது முதலாளித்துவத்துக்கு முன்னாலும் இருந்தது என்கிறார்.

மேக்ஸ் வெபர் (Max weber) “தனி மனிதன் சந்தை பொருளாதாரத்தில் உறவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, அவன் முதலாளித்துவ விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து கட்டுப்படாமல் நடப்பவன் தூக்கியெறியப்படுவான் என்கிறார்.

தாமஸ் ஜோசப் டன்னிங் (Thomas Joseph Dunning)

”இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபத்தை வெறுக்கிறது. இலாபம் சரிவரக் கிடைப்பதைப் பொறுத்துதான் அது பலமடைகிறது. 10% இலாபம் நிச்சயம் என்றால் அது எல்லா இடத்திலும் வேலை செய்யும். 20% இலாபம் என்றால் சூடு பிடிக்கும். 50% இலாபம் என்றால் அதன் தைரியம் அளவுக்கு மீறி அதிகரிக்கும். 100% என்றால் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% என்றால் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது-தூக்குக் கயிறை எதிர் கொள்ள வேண்டுமென்றாலும் கூட என முதலாளித்துவ மனநிலையை விளக்குகிறார்.

நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில் மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.

முதலாளித்துவ வகைகள்

  1. விவசாய முதலாளித்துவம்

  2. வியாபாரத்துவம்

  3. தொழில்துறை முதலாளித்துவம்

  4. நவீன முதலாளித்துவம்

விவசாய முதலாளித்துவம்

நிலப்பிரபு விவசாய முறையின் பொருளாதார அஸ்திவாரங்கள் 16 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் கணிசமான மாற்றம் தொடங்கியது; புனரமைப்பு முறை உடைந்து விட்டது, பெருமளவிலான நிலப்பகுதிகளைக் கொண்ட நிலப்பகுதிகளில் நிலமானது செறிவூட்டப்பட்டது. ஒரு அடிமை-அடிப்படையிலான உழைப்பு முறைக்கு பதிலாக, பரந்த மற்றும் விரிவடைந்த பண அடிப்படையிலான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் பெருகிய முறையில் பணியாற்றினர். லாபம் சம்பாதிப்பதற்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இந்த முறை நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே அழுத்தம் கொடுக்கப்பட்டது; விவசாய உபகாரங்களைப் பிரித்தெடுக்க பிரபுத்துவத்தின் பலவீனமான வலிமையின் சக்தி அவர்களுக்கு சிறந்த வழிமுறைகளைத் தேடுவதற்கு உற்சாகப்படுத்தியது, மேலும் போட்டித் தொழிலாளர் சந்தையில் வளரும் பொருட்டு குடியிருப்பாளர்கள் தங்கள் முறைகளை மேம்படுத்துவதற்கு ஊக்கமளித்தனர். நிலத்திற்கான வாடகை நிபந்தனைகள், முந்தைய சந்தை தேவைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ கடமைகளை விட பொருளாதார சந்தை சக்திகளுக்கு உட்பட்டன.

17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய கிழக்கு ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவ ஒழுங்கின் பெரும்பகுதி வெட்டப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்தது. இந்த மையமயமாக்கல் நல்ல சாலைகள் மற்றும் ஒரு பெரிய அளவிலான மூலதன நகரமான லண்டன் மூலம் பலப்படுத்தப்பட்டது. மூலதனம் முழு நாட்டிற்கும் மைய சந்தை மையமாக செயல்பட்டு, பொருட்களுக்கு ஒரு மிகப்பெரிய உள்சந்தையை உருவாக்கி, கண்டத்தின் பெரும்பகுதிகளில் நிலவிய பிளவுபட்ட நிலப்பிரபுத்துவ சொத்துக்களுடன் முரண்பட்டது.

வியாபாரத்துவம்

16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவும் பொருளாதார கோட்பாடு பொதுவாக வணிகவாதம் என அழைக்கப்படுகிறது. இந்த காலம், கண்டுபிடிப்பின் யுகம், வர்த்தக வணிகர்கள், குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து மற்றும் குறைந்த நாடுகளில் இருந்து வெளிநாட்டு நிலங்களின் புவியியல் ஆய்வு தொடர்புடையதாக இருந்தது. (Mercantilism) வியாபாரத்துவம் என்பது இலாபத்திற்கான வர்த்தக முறையாகும், இருப்பினும் பொருட்களும் இன்றியமையாத முதலாளித்துவ முறைகளால் உற்பத்தி செய்யப்பட்டன. பெரும்பாலான அறிஞர்கள் வணிக முதலாளித்துவ மற்றும் வணிகவாதத்தின் சகாப்தத்தை நவீன முதலாளித்துவத்தின் தோற்றமாகக் கருதுகின்றனர், என்றாலும், முதலாளித்துவத்தின் முத்திரை என்பது "கற்பனையான பண்டங்கள்" என்று அழைக்கப்படும் " உழைப்பு, பணம். அதன்படி, "1834 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் நிறுவப்பட்ட ஒரு போட்டி தொழிலாளர் சந்தையாக இல்லை, எனவே ஒரு சமூக அமைப்பாக தொழில்துறை முதலாளித்துவம் அதற்கு முன்பே இருந்ததாக கூற முடியாது.

தொழில்துறை முதலாளித்துவம்

டேவிட் ஹியூம்

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், டேவிட் ஹியூம் (David hume) மற்றும் ஆடம் ஸ்மித் (Adam Smith) தலைமையிலான பொருளாதார கோட்பாட்டாளர்களின் ஒரு புதிய குழுவானது கோட்பாடுகளை சவால் செய்தது, 1776 ல் வெளிவந்த ஆடம் ஸ்மித்தின் “நாடுகளின் செல்வம்” (The Wealth of Nations) எனும் நூலில் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. உலகின் செல்வம் நிலையானதாக இருப்பதற்கும், ஒரு அரசு அதன் செல்வத்தை அதிகரிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையைப் போன்ற மேலும் ஒரு மாநிலமானது மற்றொரு நாட்டின் செலவில் அதன் செல்வத்தை அதிகரிக்க முடியும்.

ஆடம் ஸ்மித்

தொழில்துறை புரட்சி போது, தொழிலதிபர்கள் வர்த்தகர்களை முதலாளித்துவ முறையின் ஒரு மேலாதிக்கக் காரணியாக மாற்றினர் மற்றும் கலைஞர்களின், செய்பவர்கள், மற்றும் பயணிப்போர் பாரம்பரிய கைவினைத் திறன்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். இந்த காலகட்டத்தில், வர்த்தக விவசாயத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட உபரி விவசாயத்தை இயந்திரமயமாக்க அதிகப்படுத்தியது. தொழிற்துறை முதலாளித்துவம், உற்பத்தி செயல்முறைக்குள்ளாகவும் மற்றும் பணிகளுக்கு இடையேயான சிக்கலான தொழிலாளர் பிரிவினை வகைப்படுத்தப்படும் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பின் வளர்ச்சியைக் குறிக்கிறது; இறுதியில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் பூகோள மேலாதிக்கத்தை நிறுவியது.

நவீன முதலாளித்துவம்

உலகமயமாதலின் பரந்த செயல்முறைகளால் உலகெங்கிலும் முதலாளித்துவம் வழிநடத்தப்பட்டது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பொருளாதார மற்றும் பிற பூகோளமயமாக்கலின் தீவிரமடைந்துவரும் செயல்முறைகளை ஆழ்ந்த முறையில் பொருளாதாரம் மற்றும் பிற உலகமயமாக்கல் இருக்கிறது. பின்னர், 20 ஆம் நூற்றாண்டில், மத்திய-திட்டமிட்ட பொருளாதாரங்கள் ஒரு முரண்பாட்டை முதலாளித்துவம் முறியடித்து இப்போது உலகளாவிய சூழ்நிலையை கொண்டுள்ளது, கலப்பு பொருளாதாரம் தொழில்மயமான மேற்கத்திய உலகில் அதன் மேலாதிக்க வடிவமாக இருப்பது.

தொழில்மயமாக்கல் வீட்டுப் பொருட்களின் மலிவான உற்பத்தியை பொருளாதாரம் அளவைப் பயன்படுத்தி அனுமதித்தது, அதே சமயம் விரைவான மக்கள்தொகை வளர்ச்சி பொருட்களின் தேவையை அதிகரித்தது. இந்த காலத்தில் உலகமயமாக்கல் 18 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக வடிவமைக்கப்பட்டது.

உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை.  விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என்றார் பொருளியல் நிபுணர் மாரிஸ் அலைஸ்.  ஆனால் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி முதலாளித்துவக் கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. மாற்றுக் கொள்கையான பொதுவுடைமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் நாடுகளில்கூட முதலாளித்துவத்தின் தாக்கம் மிகுந்தே காணப்படுகிறது.  கம்யூனிஸ சீனா இன்று முதலாளித்துவ எஜமானர்களின் அபிமானத்திற்குரிய பிரதேசமாகவே ஆகிவிட்டது. 

முதலாளித்துவத்தில் உள்ள குறைபாடு

"முதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.  "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் .

முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை" (laissez faire system) என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.

முதலாளித்துவத்தின் இன்னொரு அடிப்படை 'பொருளாதார மனிதன்' (Homo Economicus) எனும் கோட்பாடு. பொருளாதார நடவடிக்கைகளில் மனிதர்கள் இப்படி-இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என சில பொருளியல் நிபுணர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குடியிருப்புப் பகுதியில் பலசரக்குக்கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் தமது வாடிக்கையாளர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்து வைத்திருப்பார்: 'இவர்கள் நடுத்தர வருமானமுடைய மாதச் சம்பளக்காரர்கள், மாதத்தின் முதல் பாதியில் வீட்டு உபயோக, மளிகைப் பொருட்களை அதிகம் வாங்குவார்கள், விலை ஏற்ற இறக்கங்களில் மிக கவனமாக இருப்பார்கள், இவர்களை நம்பி கடன் கொடுக்கலாம், தேதி பிறந்தவுடன் கடனை அடைத்து விடுவார்கள்' இப்படி எல்லாம் அவரது கணிப்பு இருக்கும். அவரது இந்த மதிப்பீட்டைப் பொருத்தே அவர் கொள்முதல் செய்யும் பொருட்கள், அதன் தரம், விலை, விளம்பரம் ஆகியவை அமையும்.

ஜான் அண்டர்சன் கே

அது போலவே, சில பொருளியல் நிபுணர்களின் கணிப்புப்படி மனிதர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஜான் அண்டர்சன் கே (John Anderson Kay) என்ற பொருளியலாளர், "மனிதர்கள் பொதுவாக சுயநலவாதிகள். உலகாதாய நோக்கம் மட்டுமே கொண்டவர்கள். தனது செல்வ மதிப்பை கணக்கிடுவதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்" என்கிறார். இதுதான் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் 'பொருளாதார மனிதன்'. மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான், சிறு முதலாளிகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை தங்கள் லாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யும் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும், நியாயப்படுத்தப்படுகின்றன.

மனித வாழ்வின் பல நிலைகளில் மாறிக்கொண்டே இருக்கும் அவனது தேவைகளை ஆபிரஹாம் மாஸ்லோ (Abraham maslow) என்ற சமூகவியலாளர் வகைப்படுத்தியிருக்கிறார். மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவனைச் செலுத்தும் உந்துசக்தியாக இருப்பது அவனது தேவைகள்தாம் என்பது அவரது கருத்து.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றே தான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம்.

'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.

தம்மால் சுமக்க முடியாத ஒரு பெரும் சுமை தம் தலைமேல் ஏற்றப் பட்டதை அந்தத் தொழில் முனைவர் மிகத் தாமதமாகவே புரிந்துக் கொண்டார். மருந்து வியாபாரம் எப்படி நடந்தாலும் கடனுக்கான வட்டி 10 கோடியை வருடா வருடம் கட்டாயம் கட்ட வேண்டி இருந்தது.  மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற அவரது திட்டத்தை ஓரம்கட்டிவிட்டு மருந்துகளின் விலையை உயர்த்தினார்.  அடுத்ததாக, செலவுகளை குறைக்க வேண்டி நிறையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். அதற்கும் அடுத்து, விலை மலிவான தரம் குறைந்த மூலப் பொருள்களை உபயோகிக்கத் தொடங்கினார். அவர் செய்த ஒவ்வொரு மாற்றத்திற்குப் பிறகும் மருந்து வியாபாரம் மேலும் சரிந்துக் கொண்டே சென்றது. வட்டி கட்ட முடியாத நிலையில் அவர் தனது சொத்துக்களையும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் நாட்டில் கடன் வாங்கி நொடித்து ஏழையாகிப் போனவர்களின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்தது.

முதலாளித்துவத்தின் இரத்த ஓட்டமான வட்டியின் யதார்த்த நிலை இது! 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com