அரசியல் என்றால் என்ன?

அரசியல் என்றால் என்ன?

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அரசியல் என்பது சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவது. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன.

சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும். வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும். அறிவுத்துறை மேம்படும். பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும்.

அரசியல் = அரிசி + இயல்

அரிசி என்ற வார்த்தையிலிருந்து தான் ரைஸ் வந்தது என H.B ப்ராக்டர் (HB Proctor) குறிப்பிடுகிறார். பண்டைய காலந்தொட்டு அரிசி இயலாக நடந்து வருகிறு. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று அரிசி அரசியலை மேம்படுத்தி வந்திருக்கிறார்கள். அரிசி கிலோ ஒரு ரூபாய் என்று போட்டு அரிசி அரசியலில் செய்துகொண்டிருந்த கலைஞரை பின்னுக்கு தள்ளிவிட்டு கிலோ ஒரு ரூபாய் கூட இல்லை இனி அது இலவசம் என்று கூறி அரிசி அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஜெயலலிதா.

அரசு /அரசாங்கம்

அரசு /அரசாங்கம் (government) அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர் ஆகும்.

அரசைக் கட்டுப்படுத்தும் சட்டமியற்றுவோர், நிர்வகிப்போர், நிர்வாக அதிகாரமுள்ளோரைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட முறை. அரசாங்கம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒன்றாகவும், அரச கொள்கையினை வரையறுக்கும் அமைப்பாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அமைப்பு என்பது ஒர் அரசின் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களின் அமைப்பாக நோக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை வடிவம், அரசாங்கத்தின் முறை என்பவற்றை உள்ளடக்கியது. ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு.

அரசியல்வாதி

அரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.

அரசு மக்களின் வாழ்தரத்தை நிர்மாணிக்கும் ஒரு முக்கிய கூறு. அதனால் அரசியல்வாதிகளின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவை.

சேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களை அரசியல்வாதி என்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com